For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைப்பிடித்து பாழாய் போன நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய எளிய டிப்ஸ்!!!

|

புகைப் பிடிப்பதால் 90%திற்கும் மேலாக பாதிக்கப்படுவது உங்கள் நுரையீரல் தான் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஏறத்தாழ வெண் பஞ்சு போல இருக்கும் உங்கள் நுரையீரல், தாரில் போட்டு முக்கியதை போல ஆகிவிடுகிறது தொடர்ந்து புகைப்பதால். திரைப்படம், விளம்பரம், ஏன் புகைக்கும் சிகரட் மீது இது தீங்கு என்று கூறியும் கூட பலர் தொடர்ந்து புகைத்து வருகிறார்கள்.

தப்பி, தவறியும் கூட இந்த ஐந்து உணவை சாப்பிட்டுவிடக் கூடாது? ஏன் என்று தெரியுமா??

புகைக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாலும் கூட சில சமயம் நுரையீரல் பாதிப்பு அப்படியே தான் இருக்கும். எனவே, நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். இது மிகவும் கடினமான செயல் எல்லாம் இல்லை. மிக எளிய வழிமுறைகளை நீங்கள் தினமும் பின்பற்றினாலே நுரையீரலை சுத்திகரிப்பு செய்து விடலாம்....

கெட்டுப்போகாமல் இருக்க பன்றி இறைச்சி கலந்து விற்கப்படும் சைவ உணவுகள் - அதிர்ச்சி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

நன்கு இழுத்து மூச்சு விடும் பயிற்சியை மேற்கொள்வதால் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களைப் போக்க முடியும் என்று கூறப்படுகிறது. தினமும் யோகா செய்வதால் உங்களது நுரையீரலை நன்கு வலுபடுத்த முடியும். நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய இது ஓர் சிறந்த இயற்கை முறையாகும்.

புதினா

புதினா

நீங்கள் உண்மையிலேயே தீவிரமாக நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய விரும்பினால் அதற்கான சிறந்த வழி, புதினாவை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது தான். புதினாவில் இருக்கும் நற்குணங்கள் உங்கள் நுரையீரலில் ஏற்பட்டுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உணவில் கற்பூரவள்ளி எனும் மூலிகை உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. கற்பூரவள்ளியின் குணமானது சுவாசக் குழாயில் இருக்கும் தடைகளை போக்கி, இலகுவாக சுவாசிக்க உதவுகிறது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி'யை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல் தானாகவே சுத்திகரிப்பு ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

இஞ்சி

இஞ்சி

நாசி பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய இஞ்சி ஒரு சிறந்த வீட்டு நிவாரண மருந்தாகும். வெறும் இஞ்சியை வாயில் போட்டு மெல்லுவதால் புகையின் காரணமாக பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய முடியும். இது சுவாசக் குழாய்களையும் சரி செய்து நன்கு சுவாசிக்க உதவுகிறது.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய முதலில் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை போக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை போக்க ஓர் சிறந்த உணவு கேரட். தினமும் இரண்டு முறை நீங்கள் கேரட் ஜூஸ் பருகி வந்தால் நுரையீரலை எளிமையாக சுத்திகரிப்பு செய்துவிடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கக் கூடியது எலுமிச்சை. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடற்திறன் அதிகமாகவும் உதவுகிறது. புகையால் பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய மற்றுமொரு சிறந்த உணவாக விளங்குகிறது எலுமிச்சை. தினமும் எலுமிச்சை சாறு குடித்து வந்தால், உங்கள் நுரையீரலை வலிமையாக்க முடியும்.

புகையை நிறுத்துங்கள்

புகையை நிறுத்துங்கள்

இவ்வளவு செய்தாலும், நுரையீரலை சுத்திகரிப்பு செய்ய முதலில் நீங்கள் புகையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் இதை செய்துக் கொண்டு, மறுப்பக்கம் புகைத்து கொண்டிருந்தால் நுரையீரல் எப்போதும் சுத்திகரிப்பு ஆகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ways Smokers Can Purify Their Lungs

Smokers there is still hope after all. Here are some of the decent ways you can purify your lungs to a whole new level. Take a look at some of these ways.
Desktop Bottom Promotion