For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!

|

பாட்டியை மறந்த கையேடு மறுநொடியே முற்றிலும் இயற்கையான, எந்த பக்க விளைவுகளும் அற்ற பாட்டி வைத்தியத்தையும் மறந்துவிட்டோம் நாம். குளிர் மற்றும் மழை காலம் ஆரம்பித்துவிட்டாலே, மழலை முதல் முதியவர் வரை அனைவருக்கும், சளி, இருமல், காய்ச்சல் ஆடி தள்ளுபடி போல ஒட்டிக்கொண்டு வந்துவிடும்.

சாதாரணமாக இவை ஓரிரு நாட்களில் ஓடிவிட்டாலும், இந்த அடி மாத குளிரில், ஒவ்வொரு விடியலிலும் சூரியனோடு சேர்ந்து இதுவும் விடிய ஆரம்பித்து விடும். இந்த விடாத கருப்பை ஒரே நாளில் தூர விரட்ட சில எளிய பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனி பாப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை இல்லாது கடுங்காப்பி

சர்க்கரை இல்லாது கடுங்காப்பி

சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலை வேளையில் குடித்து வந்தால் சளி குறையும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் நன்கு தடவி வந்தால் சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.

மாதுளம் பழம்

மாதுளம் பழம்

மாதுளம் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குறையும்.

காய்ச்சல் குறைய..

காய்ச்சல் குறைய..

அரிசிதிப்பிலியை நன்கு காயவைத்து, பிறகு அதை இடித்து வெற்றிலைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் எளிதில் குறையும்.

கற்பூரவல்லி மற்றும் துளசி

கற்பூரவல்லி மற்றும் துளசி

துளசி மற்றும் கற்பூரவல்லி இரண்டையும் சம அளவு எடுத்து ,அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி விகிதம் என தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.

ஆட்டுகால் சூப்

ஆட்டுகால் சூப்

சளி அல்லது நெஞ்சு சளி அதிகமானால், மிளகு கொஞ்சம் அதிகம் சேர்த்த ஆட்டுக்கல் சூப் குடித்தால் போதும், ஒரே நாளில் சளி மொத்தமும் குறைந்துவிடும். இதமான சூட்டில் பருக வேண்டியது அவசியம்.

மிளகு ரசம்

மிளகு ரசம்

சளியில் இருந்து குணமடைய எளிய வழி மிளகு ரசம் மற்றும் கொள்ளு ரசம். இவை இரண்டுமே சளியை ஒரே நாளில் போக்கக்கூடிய தன்மை கொண்டவை.

துளசி மற்றும் இஞ்சி

துளசி மற்றும் இஞ்சி

துளசி இலைச்சாறு மற்றும் சிறிது இஞ்சிச்சாறு கலந்து பருகி வந்தால் சளி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இஞ்சி டீயும் சளி பிரச்சனைக்கு நல்ல தேர்வு தரும்.

சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் தேன்

சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் தேன்

சின்ன‌ வெங்காயச்சாறு 20 மில்லி, இஞ்சிச்சாறு 20 மில்லி, தேன் 20 மில்லி என இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து இரு தினங்கள் ஒரு வேளை மட்டும் உணவுக்கு முன் பருகி வந்தால், சளி, இருமல் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Home Made Granny Therapy For Cold and Fever

Simple Home Made Granny Therapy For Cold and Fever.
Story first published: Thursday, July 23, 2015, 16:39 [IST]
Desktop Bottom Promotion