For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகுந்த வேலை பளுவால் ஏற்படும் சோர்விலிருந்து விடுப்பட்டு புத்துணர்ச்சி அடைய எளிய வழிகள்!!!

By John
|

சில பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே லேப்டாப் இலவசமாக பயன்படுத்த கொடுக்கின்றன. இது அலுவலர்கள் மேல் இருக்கும் பிரியத்தினால் அல்ல, வீட்டிற்கு சென்றாலும், விடுப்பில் சென்றாலும் கூட நிம்மதியாக இருக்க விடாமல், அவர்களை வேலை செய்ய வைக்க அவர்கள் விரிக்கும் மாய வலை..

உடல்நலத்தை பாதுகாக்க, வேலை செய்யும் இடத்தில் இருந்தவாறே எளிதாக செய்யக் கூடிய பயிற்சிகள்!!!

வேலை, வேலை என ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் பலரது வாழ்க்கை சோம்பலோடு தொடங்கி சோர்வில் தான் முடிகிறது. இதில் இருந்து அவர்கள் வெளிவர இரண்டு வழிகள் தான் இருக்கிறது ஒன்று, அந்த வேலையை கைவிடுவது, மற்றொன்று, ஒரு சில புத்துணர்ச்சி அடைய உதவும் எளிய வழிகளில் ஈடுபட வேண்டியது.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கான எளிய வழிகள்!!!

எப்படியும் வேலையை விட முடியாது எனவே, நீங்கள் சோர்விலிருந்து புத்துணர்ச்சி அடைய செய்ய வேண்டிய அந்த எளிய வழிகளை பற்றி இனிக் காணலாம்...

பிறந்த மேனியில் யோகா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுக்கு வேலைக் கொடுக்கும் விளையாட்டுகள்

உடலுக்கு வேலைக் கொடுக்கும் விளையாட்டுகள்

கண்டிப்பாக உங்களில் ஒவ்வொருவரும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஏதுனும் ஓர் விளையாட்டில் ஈடுபாடுடன் விளையாடி இருப்பீர்கள். வேலை காரணமாக அதை இப்போது கை விட்டுருப்பீர்கள். முள்ளை, முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல, உங்களது உடல் சோர்வை, உடலுக்கு வேலைக் கொடுக்கும் விளையாட்டுகளின் மூலமாக எளிதாக போக்க முடியும். கால்பந்து, கிரிக்கெட் எதுவாக இருந்தாலும் சரி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அரை மணிநேரமாவது விளையாடுங்கள் இது உங்களை புத்துணர்ச்சியாக உணர உதவும்.

மனைவியின் கையால் மசாஜ்

மனைவியின் கையால் மசாஜ்

ஒரே இடத்தில் கணினியின் அருகேயே அமர்ந்து வேலை செய்யும் போது கட்டாயம் உங்களது உடல் சூடு அதிகரிக்கும். இது, உடல் சோர்வு ஏற்பட ஓர் காரணமாக இருக்கும். எனவே, அதைப் போக்க மசாஜ் செய்யுங்கள். இதற்கு நீங்கள் பிலிப்பைன்ஸ், ஜப்பான் என்று வெளிநாடுகளுக்கோ, மசாஜ் செண்டர்களுக்கோ போக அவசியம் இல்லை, உங்களது மனைவியின் கையால் எண்ணெய்யை எடுத்து நீவி விட கூறுங்கள் அதை விட சிறந்த மசாஜ் வேறுதுவும் இல்லை. (மனைவி இல்லாதவர்கள், மசாஜ் சென்டர்களுக்கு தான் செல்ல வேண்டும்)

யோகா

யோகா

யோகா, உடல் மற்றும் மன நிலையை ஒருநிலையாக வைத்துக்கொள்ள உதவும் ஓர் சிறந்த பயிற்சியாகும். நேரம் கிடைக்கும் போது என்று இல்லாமல், காலை மற்றும் மாலை வேளைகளில் ஓர் கால் மணிநேரம் ஒதுக்கி யோகா பயிற்சி செய்வதை ஓர் பழக்கமாக பின்பற்றி வந்தால் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

தியானம்

தியானம்

தினமும் காலை, மாலை இரு வேளைகளில் தியானம் செய்து வருவது உங்கள் உடல் சோர்வை போக்குவது மட்டுமின்றி, மனதை ஒருமுகப்படுத்த உதவி, உங்கள் வேலையிலும் முன்னேற்றம் காண உதவும். குறைந்தது 15 நிமிடங்கள் தினமும் தியானம் செய்தாலே போதுமானது.

நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல்

நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல்

மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கட்டாயம் செய்யும்படி பரிந்துரைக்கப்படும் பயிற்சி, நீச்சல் என்பது குறிப்பிடத்தக்கது. இது உங்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கும் பண்புடையது. இது உடல் சோர்வை போக்கும் ஓர் சிறந்த பயிற்சி ஆகும்.

எளிதான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

எளிதான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

வேலை செய்யும் போதே உங்களது உடல் சோர்வை குறைக்க இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உதவும். கால், கைகளை நீட்டி, மடக்கி செய்யும் இந்த பயிற்சிகள் உங்கள் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கும். வேலைக்கு இடைவேளையில் ஓர் 10 நிமிடங்கள் நீங்கள் இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளில் ஈடுபட்டாலே போதுமானது.

உடலுறவு

உடலுறவு

இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல. உடலுறவும் கூட ஓர் வகையான உடற்பயிற்சி தான். சீரான முறையில், இடைவேளையில் உடலுறவு வைத்துக்கொள்வது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. இது, உங்கள் மனது மற்றும் உடல் இரண்டையும் இலகுவாக வைத்துக்கொள்ள உதவும். உங்கள் உடல் சோர்வை குறைத்து, புத்தணர்ச்சி அடைய வைக்கும் மிக எளிதான வழி உடலுறவில் ஈடுபடுவது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Refreshing Ideas To Relax After A Tiring Day At Work

Due to heavy load and stressful work, you may get tired easily. Do you want to refresh or relax from easy ways? do these things. Take a look.
Desktop Bottom Promotion