எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!

Subscribe to Boldsky

பொதுவாகவே நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும், கண், வாய், சருமத்தில் தோன்றும் அறிகுறிகளை வைத்தும் நமது உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியும்.

எச்சில் துப்புவது என்பது நமது ஊர்களில் ஒருவரை அவமதிப்பது போலவும், ஓர் அநாகரீக செயலாகவும் காணப்படுகிறது. ஆனால், லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சிலை வைத்து மரணத்தை முன்னரே அறிய முடியும் என ஓர் ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆன்டி-பாடீஸ் குறைவு

உங்கள் எச்சிலில் ஆன்டி- பாடி எண்ணிக்கை குறைவதை வைத்தே நீங்கள் மரணமடையும் அபாயத்தில் உள்ளீர்கள் என கண்டறியலாம்.

இம்யூனோக்ளோபுலின் சுரப்பி

பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிலர் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தான், எச்சிலில் இருக்கும் பொதுவான ஆன்டி- பாடி எண்ணிக்கை மரண விகித்தத்தோடு ஒத்துப்போவது தெரிய வந்தது.

தொற்று நோய் அபாயம்

வெள்ளை இரத்த அணுக்களில் சுரக்கப்படும் புரதங்கள் ஆகிய இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறன் வாய்ந்தது ஆகும். இந்த ஆய்வில் இம்யூனோக்ளோபுலின் ஏ சுரப்பி ( Immunoglobulin A - IgA) -ல் ஏற்படும் / அதிகரிக்கும் எதிர்மறை சதவீதத்தை வைத்து மரணத்தை கணக்கிட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் மரணங்கள்

நுரையீரல் தவிர்த்து மற்ற வகை புற்றுநோய் மரணங்கள் ஏற்படுவதை கூட இதை வைத்து அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தாக்கங்கள்

வயது, பாரம்பரியம், உடல்நலக் குறைபாட்டுடன் சேர்த்து மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மதுப் பழக்கம், புகை போன்றவை இம்யூனோக்ளோபுலின் (அ) ஆன்டி-பாடீஸ் சதவீதம் குறைய காரணிகளாக இருக்கின்றன.

ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள்

இந்த ஆய்வில் மொத்தம் 639 நபர்கள் கலந்துக் கொண்டனர். 1995-ம் ஆண்டு இவர்கள் 63 வயதில் இருந்த போது எச்சில் சேமிக்கப்பட்டது. ஏறத்தாழ 19 ஆண்டுகள் இவர்களை பின்தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாசிரியர்

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிலிப்ஸ் எனும் ஆய்வாசிரியர் தான் இந்த ஆய்வை நடத்தினார். உடல்நல பரிசோதனை செய்யும் போது எச்சிலை வைத்தும் பரிசோதிக்க வேண்டும். இதை வைத்து நமது உடலில் பாதுகாப்பு அளவு எந்தளவு இருக்கிறது என கண்டறிய முடியும் என பிலிப்ஸ் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Saliva Can Reveal Risk Of Early Death

Saliva Can Reveal Risk Of Early Death
Please Wait while comments are loading...
Subscribe Newsletter