For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க வெஜிடேரியனா? அப்ப நீங்க ரொம்ப நாள் உயிர் வாழ்வீங்க...

By Maha
|

அசைவ உணவை வயிறு நிறைய சாப்பிடுபவர்களுக்கு, சைவ உணவுகளே பிடிக்காது. ஆனால் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட, சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்பது தெரியுமா?

ஆனால் ஆய்வுகளில் அசைவ உணவை உண்பவர்களை விட, சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதய நோய் வரும் வாய்ப்பும் குறைவு என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்கு காரணம் காய்கறிகளில் வைட்டமின்கள் வளமாக இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைவாகவும், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்கள் அதிகமாகவும் இருக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறக்கும் வாய்ப்பு குறைவு

இறக்கும் வாய்ப்பு குறைவு

காய்கறிகளில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாததால், தமனிகளில் அடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இதர நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இல்லை. நோய்கள் உடலைத் தாக்கினால் தானே வாழ்நாளின் அளவு குறையும்.

புற்றுநோய் அபாயம் குறைவு

புற்றுநோய் அபாயம் குறைவு

காய்கறிகள் சாப்பிடும் தட்டினை மட்டும் அலங்கரிக்க பயன்படுவதில்லை. அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, புற்றுநோய் வரும் வாய்ப்பு தடுக்கப்படும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறைவான இரத்த அழுத்தம்

குறைவான இரத்த அழுத்தம்

டயட்டில் காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்டால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இப்படி இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், வேறு சில நோய்களின் தாக்கமும் குறையும்.

நீரிழிவு அபாயம் குறைவு

நீரிழிவு அபாயம் குறைவு

சைவ உணவை உண்பதால் நீரிழிவு முற்றிலும் குணமாகாவிட்டாலும், நீரிழிவினால் ஏற்படும் ஆபத்து தடுக்கப்படும். அதிலும் காய்கறிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும்.

எடையைப் பராமரிக்கலாம்

எடையைப் பராமரிக்கலாம்

காய்கறிகளில் கொழுப்புகள் அதிக அளவில் இல்லாததால், உடலில் கொழுப்புகள் சேரும் வாய்ப்பு குறையும். இதன் மூலம் உடல் எடை கண்டபடி அதிகரிப்பதைத் தடுத்து, அதனால் பல்வேறு நோய்களின் தாக்கத்தையும் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Vegetarians Live Longer

For meat lovers, this might just be another piece of news which they would want to discard. But the truth of the matter is that good health really follows vegetarians. Studies show that vegetarians generally have lower blood pressure compared with those who eat meat.
Desktop Bottom Promotion