For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வாய் 'கப்பு' அடிக்க என்ன காரணம்ன்னு தெரியுமா?

By Maha
|

ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம். ஆசையுடன் துணையை நெருங்கும் போதோ அல்லது நண்பர்களுடன் அருகில் உட்கார்ந்து பேசும் போதோ, முகத்தை சுளித்தால் அல்லது முகத்தை திருப்பிக் கொண்டு, நம்மிடம் இடைவெளியை மேற்கொண்டால், நமக்கே ஒருவித அசிங்கமாக இருக்கும். இந்த சூழ்நிலையை நிச்சயம் ஒவ்வொருவரும் சந்தித்திருப்போம்.

சரி, இப்படி வாய் துர்நாற்றம் வீசுகிறதே, அதற்கு காரணம் என்னவென்று என்றாவது யோசித்துள்ளீர்களா? வாய் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம் சரியாக பற்களை துலக்காதது என்று நினைத்தால் அது தவறு. வாய் நாற்றம் அடிப்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு வாய் துர்நாற்றம் வீசுவதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசுத்தமான வாய்

அசுத்தமான வாய்

வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு காரணம், வாயில் ஏற்கனவே இருக்கும் பாக்டீரியாக்கள் தான். எப்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் உணவுத்துகள்களை சாப்பிடுகிறதோ, அப்போது வாயில் இருந்து கெட்ட நாற்றம் வீசும். இதற்கு ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும் வாயை நீரால் கொப்பளிக்காதது முக்கிய காரணமாகும். மேலும் உணவு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் காரணம். ஆகவே எப்போதும் எந்த ஒரு உணவுப் பொருளை உண்ட பின்னும் வாயை கொப்பளிக்கவோ அல்லது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையோ கொள்ளுங்கள்.

 கெட்ட பழக்கங்கள்

கெட்ட பழக்கங்கள்

புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் புகையிலை மெல்லுவது போன்றவை வாயின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. என்ன தான் இவற்றை மேற்கொண்ட பின் தண்ணீரால் வாயை கொப்பளித்தாலும், அவற்றின் சில துகள்கள் அல்லது அதில் உள்ளவைகள் வாயின் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே முடிந்த அளவில் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகள்

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகள்

உண்ணும் உணவில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படும். குறிப்பாக உடற்பயிற்சி செல்பவர்களை அதிக அளவு புரோட்டீன் எடுக்குமாறு பரிந்துரைப்பார்கள். ஏனெனில் புரோட்டீன் அதிகம் எடுக்கும் போது, அது உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரையும். ஆனால் அப்படி கொழுப்புக்கள் கரையும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே இதனை சமநிலைப்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகளையும் அதிகம் எடுத்து வர வேண்டும்.

தீவிர நோயின் அறிகுறி

தீவிர நோயின் அறிகுறி

உடல்நலம் மோசமாக இருக்கும் நேரத்தில் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய், இரைப்பை உண்குழலிய எதிர்வினை நோய், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். இதற்கு நோயினால் உடலில் அதிகமாக சேரும் டாக்ஸின்கள் தான் காரணம்.

உணவுகள்

உணவுகள்

பற்களில் ஒட்டும் பிசுபிசுப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகளை உண்ட பின்னர் வாயை கொப்பளித்தாலும் பற்களில் இருந்து அவை எளிதில் போகாது அப்படியே இருக்கும். எனவே இந்த உணவுகளை உண்ட பின்னர் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் வெங்காயம், பூண்டு, மசாலா பொருட்கள், சீஸ், மீன் போன்றவை தான் அதிக அளவில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை.

விரதம்

விரதம்

விரதம் அல்லது நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தாலோ, வாய் துர்நாற்றம் ஏற்படும். எப்போது ஒருவர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறாரோ, அப்போது உடலானது ஆற்றலை வெளிப்படுத்த கொழுப்புக்களை உடைக்கும். அந்நேரம் அது சுவாசத்துடன் இணைந்து, வாயில் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தி கீட்டோன்களை வெளிப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons For Bad Breath

Do you know the reasons for foul mouth odour? Here are some...
Story first published: Tuesday, February 17, 2015, 16:40 [IST]
Desktop Bottom Promotion