For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இரத்த கொதிப்புப் பிரச்சனைக்கான காரணம் இது தான்!!!

|

மீண்டும், மீண்டும் நாம் கூறுவது தான், இந்த அதிவேக வழயில் முறை நமது ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் கூட மிக விரைவாக குறைத்து விடுகிறது. கோவம், மன அழுத்தம், பொழுதுபோக்கு, வேலை, ஓய்வே என்று எதுவாக இருந்தாலும் அது கணினியை சார்ந்தே இருப்பது என்ற வாழ்வியல் முறை.

ஆண்களின் உயிரைப் பறிக்கும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!!!

இவை எல்லாமும் ஒரு பக்கம் இரத்த கொதிப்பு அதிகரிக்க வாய்ப்புகளாக அமைகிறது என்று இருப்பினும், சரியான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வது இல்லை என்பது தான் முதன்மை காரணியாக இருக்கின்றது.

உடலில் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் பொட்டாசியம் சத்தின் குறைபாடு தான் இளைஞர்கள் மத்தியில் இரத்தக் கொதிப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி

போஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி

போஸ்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Boston University School of Medicine) நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், உப்பின் மிகுதியை விட, பொட்டாசியம் சத்தின் குறைப்பாட்டினால் தான் இன்றைய இளைஞர்களின் மத்தியில் இரத்தக் கொதிப்பு ஏற்பட காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 பத்தாண்டு கால ஆராய்ச்சி

பத்தாண்டு கால ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சியில் 9-10 வயதுடைய 2,185 குழந்தைகள் பங்குபெற்று இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சரியா குழந்தை பருவம் முதல் இளமை பருவம் வரையில் இவர்களது உணவுப் பழக்கத்தை வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டாசியம் சத்து

பொட்டாசியம் சத்து

இந்த ஆராய்ச்சியில், உணவு முறையில் அதிகமாக பொட்டாசியம் சத்து சேர்த்துக் கொண்டவர்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும் சதவீதம் குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

உப்பின் அளவு...

உப்பின் அளவு...

பொதுவாக உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்வதனால் இரத்தக் கொதிப்பு அதிகமாகிறது என்று கூறப்படும். ஆனால், இந்த ஆராய்ச்சியில், உப்பின் மிகுதியை விட, பொட்டாசியம் சத்தின் குறைபாடு தான் இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

முன்பு போல, இப்போதைய சந்ததியினருக்கு ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வு இல்லை. வெறும் உணவின் பெயர்களை பார்த்தும், ருசியை பார்த்தும் தான் சாப்பிடுகின்றனரே தவிர, அந்த உணவில் என்ன சத்து இருக்கின்றது, அன்றாடம் என்னென்ன சத்தெல்லாம் உடலுக்கு தேவைப்படுகிறது என்ற அவர்கள் அறிந்து வைத்திருப்பது இல்லை.

கலோரிகள்

கலோரிகள்

முன்பு உடல் சார்ந்த வேலைகள் அதிகமாக இருந்ததால் கிலோ கணக்கில் அளவு வைத்து சாப்பிட்டு வந்தோம். ஆனால், இன்று பெரும்பாலும் அனைத்து வேலைகளும் உடல் வேலைகள் மிகவும் குறைந்தே இருக்கின்றது. எனவே, கிலோ கணக்கில் சாப்பிடுவதை தவிர்த்து கலோரிகள் கணக்கில் சாப்பிடுவது தான் இன்றைய வாழ்வியல் முறைக்கு சரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Potassium Is The Major Cause More Than Salt For BP In Teens

Do You Know That Potassium Is The Major Cause More Than Salt For BP In Teens? Read Here.
Desktop Bottom Promotion