For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 வயதை கடந்த ஆண்களுக்கான சில ஹெல்த் டிப்ஸ்...!

By Ashok CR
|

50 வயதை கடந்த ஆண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் அதிகரிக்கும் புத்திக்கூர்மை, சுகவீனம் மற்றும் நோய்களில் இருந்து எதிர்ப்பு, கூடுதல் ஆற்றல் திறன், வேகமாக குணமடையும் தன்மை மற்றும் தீவிர உடல்நல பிரச்சனைகளை சிறப்பாக மேம்படுத்துதல் போன்ற பல வித உடல்நல நன்மைகளைப் பெறலாம். நமக்கு வயது ஏற ஏற, உண்ணும் பழக்கமும் ஆரோக்கியமானதாக மாற வேண்டும். அதனால் நேர்மறையான மன நிலைப் பாங்குடன் விளங்கவும், உணர்ச்சி ரீதியாக சமநிலையுடன் இருக்கவும் இது உதவும்.

வயது ஏறும் போது, ஆண்களின் ஊட்டச்சத்து தேவைகளும் மாறிவிடும். வயது ஏறும் போது கலோரிகளை எரிக்கும் அவர்களின் தன்மையும் மெதுவாகும். அதனால் உங்களுக்கு பசியின்மை உண்டாகி, அதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவு குறையக் கூடும். சரி, அப்போ என்ன செய்ய வேண்டும்? 50 வயதை கடக்கும் போது, அந்த வயதிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் உட்கொள்ளும் போது, இந்த பிரச்சனை குறையும். அவைகளை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோமா?

சில ஆண்கள் நோய்வாய் படுவதற்கான பொதுவான சில காரணங்கள் உள்ளது; அதுவும் குறிப்பாக அவர்களுக்கு வயது ஏறும் போது. புகைப்பிடிப்பது, போதிய உடற்பயிற்சி செய்யாதது மற்றும் முறையற்ற உணவுகளை தேர்வு செய்தல் ஆகிய சில தான் அந்த காரணங்கள். சரியான நேரத்தில் நீங்கள் செயல்பட்டால், இந்த பிரச்சனைகளில் சரிசெய்ய வாய்ப்புகள் உள்ளது. உயரிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது போக நேர்மறையான வாழ்வு முறையையும் பராமரிக்க உதவும்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நேரடியாக உடல் எடையை அதிகரிக்க செய்து விடும். இதனால் கடுமையான சுகவீனங்கள் ஏற்பட்டு, வயதாகும் உங்கள் உடலை மேலும் பாதிக்கும். வயது ஏறும் போது, நோயிலிருந்து மீண்டு வரும் தன்மை குறையத் தொடங்கும். இதனால் ஆண்களுக்கு 50 வயது தாண்டும் போது, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவையற்ற சுகவீனங்கள் நீங்கும். பல வித நிறங்கள் மற்றும் வகைகளான காய்கறி மற்றும் பழங்களை உண்ணுவது மிகவும் அவசியமாகும். அதே போல் நீங்கள் உண்ணும் தானியங்களில் பாதிக்கு மேல் முழு தானியங்களாக இருக்க வேண்டும். நீங்கள் அசைவ விரும்பியென்றால், வாரம் இருமுறை கடல் உணவுகளை உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nutrition Tips For Men Over 50

A highly nutritional diet can help you improve your health as well as maintain a positive lifestyle. Un healthy eating habits puts you in direct risk of becoming over weight and expose yourself to chronic illness that take toll on your aging body.
Desktop Bottom Promotion