For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவைகள்!!!

By Maha
|

30 வயதை அடைந்த பின்னர் ஒருசில விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் 30 வயதிற்கு மேல் ஆண்களின் உடலினுள் ஒருசில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் முதன்மையானது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பித்து, அதனால் குறைவான பாலுணர்வு உந்துதல், முன்பை விட உடலின் ஆற்றல் குறைவாக இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

30 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

அதுமட்டுமின்றி, என்ன தான் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருந்தாலும், 30 வயதிற்கு பின் தொப்பை வரக்கூடும். எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதுப்போன்று பல விஷயங்களை 30 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்றுவதோடு, ஒருசிலவற்றை தவிர்க்கவும் வேண்டும்.

30 வயதில் கட்டாயம் செய்ய வேண்டிய சில முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்!!!

கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். சரி, இப்போது 30 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

30 வயதிற்கு மேல் புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், அது ஆண்மையையே அழித்துவிடும். ஏற்கனவே 30 வயதிற்கு மேலே டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் என்பதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், பின் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியாமல் போய்விடும். எனவே நீண்ட நாட்கள் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

தெருவோரக் கடைகளில் உண்பது

தெருவோரக் கடைகளில் உண்பது

துள்ளும் இளமை காலத்தில், செரிமான மண்டலம் நன்கு செயல்படும். அப்போது எந்த வகையான உணவை உண்டாலும், உணவு செரித்துவிடும். ஆனால் 30 வயதிற்கு மேல், செரிமான மண்டலத்தின் சக்தி குறைய ஆரம்பிப்பதால், அப்போது தெருவோரக் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், வாய்வு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

எப்போதாவது ஒருமுறை அளவாக மது அருந்துவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் 30 வயதிற்கு மேல் அடிக்கடி அதிகமாக குடித்தால், அதனால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் படியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

 வீடியோ கேம்ஸ்

வீடியோ கேம்ஸ்

வீடியோ கேம்ஸ் விளையாடுவதும் ஒருவித அடிமைப்படுத்தும் விஷயம் என்பதால், அதனை 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் விளையாடுவதால், அவர்களின் அறிவாற்றல் திறன்கள் பாதிக்கப்படும். மேலும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால், நன்மையை விட தீமையே அதிகம். குறிப்பாக நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடினால், கண் பார்வையை பார்வையை பாதிப்பதோடு, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், மூட்டு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கு பதிலாக, வெளியே வாக்கிங், ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல், 30 வயதிற்கு மேலும் ஜங்க் உணவுகளை கண்டபடி உட்கொண்டு வந்தால், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டே, சந்தோஷமான வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தான். எனவே ஜங்க் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அதிகப்படியான டிவி

அதிகப்படியான டிவி

ரிலாக்ஸ் செய்கிறேன் என்று சில ஆண்கள் டிவி பார்ப்பார்கள். ஆனால் அப்படி டிவி பார்ப்பதால், கண்கள் பாதிக்கப்படுவதோடு, உளவியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே ரிலாக்ஸ் செய்ய டிவி பார்ப்பதற்கு பதிலாக, குடும்பத்தினருடன் சிரித்து பேசுங்கள் அல்லது வெளியே கோவிலுக்கு செல்லுங்கள். இதனால் மனம் அமைதியடைவதோடு, ரிலாக்ஸ் ஆகும்.

தாமதமாக தூங்குவது

தாமதமாக தூங்குவது

இளம்வயதில் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தூங்கி எழும் பழக்கத்தைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வயதாக ஆக, அன்றாடம் ஒரே மாதிரியான பழக்கத்தைக் கொள்ள வேண்டும். குறிப்பாக சரியான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் பழக்கத்தை 30 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உணவைத் தவிர்ப்பது

உணவைத் தவிர்ப்பது

வயது அதிகரிக்க அதிகரிக்க, உடலில் ஆற்றல் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் 30 வயதை எட்டிவிட்டால், சிறப்பாக செயலாற்ற சரியான நேரத்தில் தவறாமல் உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்தை புறக்கணித்தல்

ஆரோக்கியத்தை புறக்கணித்தல்

30 வயதை ஒருவர் எட்டிவிட்டால், ஆரோக்கியத்தின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும். எவராயினும், மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒருவேளை புறக்கணித்தால், அதனால் தீவிரமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வயதாக வயதாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். எனவே கவனம் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Things A Man Shouldn't Do After 30

What are the things a man shouldnt do after 30? Well, there are many unhealthy things. Read on to know about the things you shouldnt do after 30.
Desktop Bottom Promotion