For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறிய ஆண்குறிப் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வுக் காண, புதியக் கண்டுபிடிப்பு!!!

வடக்கு கரோலினாவில் உள்ள, வேக் ஃபாரஸ்ட் நிறுவனம் (Wake Forest Institute for Regenerative Medicine) தான் இந்த புதியத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.

By John
|

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்க தான் செய்கிறது. ஆனால், நமது பிறப்பின் அடிப்படையான, வம்ச விருத்தியாவதிலேயே பிரச்சனையாக இருப்பது தான் சிறிய ஆண்குறிப் பிரச்சனை. இது, மரபணு ரீதியாகத்தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

விந்தணு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதியக் கண்டுப்பிடிப்பு!!

ஆண் மகனாய் பிறக்கும் ஒவ்வொருத்தரும் இந்த பிரச்சனை மட்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தான் விரும்புவர். வெளிக் கூற முடியாது, நிறைய மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும், இந்த சிறிய ஆண்குறியின் பிரச்சனையினால்.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

ஆனால், மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் நமது அறிவியல் வளர்ச்சி, இதற்கு ஓர் முழுமையான தீர்வினைக் கண்டுப்பிடித்துள்ளது. இனி, சிறிய ஆண்குறியின் பிரச்சனைக்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய தீர்வினைப் பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி கூடத்தில் வளர்க்கும் முறை

ஆராய்ச்சி கூடத்தில் வளர்க்கும் முறை

கடந்த ஆண்டு வெற்றிகரமாக ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து, ஆண்குறியை வளர வைத்து ஆராச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். இன்னும் ஐந்து வருடங்களில் இது மனிதர்களிடையே பரிசோதிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றனர்.

ஆண்குறி வளர்ச்சி

ஆண்குறி வளர்ச்சி

ஆண்குறியில் காயம் அல்லது நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பிறவி பிரச்சனையாக இருந்தாலும் கூட, ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து வளர வைக்கப்பட்ட ஆண்குறியை வைத்து குணம் செய்ய முடியும் என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

வேக் ஃபாரஸ்ட் நிறுவனம்

வேக் ஃபாரஸ்ட் நிறுவனம்

வடக்கு கரோலினாவில் உள்ள, வேக் ஃபாரஸ்ட் நிறுவனம் (Wake Forest Institute for Regenerative Medicine) தான் இந்த புதியத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாதுகாப்புக் குறித்து ஆராய்ச்சி

பாதுகாப்புக் குறித்து ஆராய்ச்சி

ஆராய்ச்சியாளர்கள் இப்போது, ஆராய்சிக் கூடத்தில் வைத்து வளர்க்கப்படும் ஆண்குறியின் பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் ஆயுள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பெண்குறி குறித்த ஆராய்ச்சி

பெண்குறி குறித்த ஆராய்ச்சி

இதே அணி, ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பெண்குறிக் குறித்த ஆராய்ச்சி செய்தி வெற்றிக் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் வெற்றிகரமாக நான்கு பருவ வயது பெண்களுக்கு, ஆராய்சிக் கூடத்தில் வைத்து வளர்க்கப்பட்ட பெண்குறியை அவர்களது உடலில் பொருத்தி சாதனை செய்துள்ளனர்.

பிறப்புறுப்பு சார்ந்த நோய்

பிறப்புறுப்பு சார்ந்த நோய்

இந்த ஆராய்ச்சியாளார்கள் கண்டுபிடித்த பெண்ணுறுப்பு, பிறப்புறுப்பு வளர்ச்சி சார்ந்த நோய் (MRKH - Mayer-Rokitansky-Küster-Hauser) இருந்த பெண்களுக்கு பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது

புற்றுநோய் தாக்கம் உள்ளவர்களுக்கும் இது சாத்தியம்

புற்றுநோய் தாக்கம் உள்ளவர்களுக்கும் இது சாத்தியம்

புதியதாய் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள முறை, பிறப்புறுப்பு புற்றுநோய் மற்றும் காயங்கள் உள்ளவர்களுக்கும் தீர்வளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

அமெரிக்க ராணுவம் நிதியுதவி

அமெரிக்க ராணுவம் நிதியுதவி

இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்க ராணுவம் நிதியுதவி அளித்து உதவியுள்ளது. இந்தக் கண்டுப்பிடிப்பினால் போர்களத்தில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Invention To Cure Short Penises Problem For Men

Do you know about the new invention that will help to cure short penises problem for men? read here.
Desktop Bottom Promotion