கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை பிரச்சனையா? - சிறப்பு தைலம்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய கணினி யுகம், ஸ்மார்ட் மொபைல் பயன்பாடு, நள்ளிரவு வரை கொட்ட, கொட்ட விழித்துக் கொண்டு டிவியில் படம் பார்க்கும் வாழ்வியல் முறையின் காரணமாக அதிகளவில் கண்வலி, கண் எரிச்சல், கண் பார்வை மங்கலாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்!!!

இதற்கான ஒரே தீர்வு கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டனர் பலர். முக்கியமாக ஐ.டி.வாசிகள். ஏன்? இன்றைய மழலைகள் கூட கண்ணாடி அணியும் அபாயத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு இயற்கையில் நிறைய சிறந்த தீர்வுகள் இருக்கின்றன.

கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!

அதிலும், கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஓர் சிறந்த தைலம் மற்றும் அதை எப்படி தயாரித்து, பயன்படுத்துவது என்பது பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

கண் வலி, கண் எரிச்சல் மற்றும் மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த தைலம் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மற்றும் சீரான முறையில் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர பயனளிக்கிறது.

தேவையான பொருள்கள்

தேவையான பொருள்கள்

கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் இந்த தைலத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்,

கரிசலாங்கண்ணி சாறு.
பொன்னாங்கண்ணி சாறு.
கீழாநெல்லி சாறு.
சோற்றுக்கற்றாழை.
எள் எண்ணெய்.
விளக்கெண்ணெய்.
நெய்.
வெள்ளை மிளகு.
சந்தனக்கட்டை.
வெட்டி வேர்.
பசும்பால்.
இளநீர்.

செய்முறை:

செய்முறை:

முதலில் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகிய மூன்றின் வேரை நீக்கி சுத்தம் செய்து அதை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை:

செய்முறை:

பிறகு சோற்றுக் கற்றாழையின் தோலை நீக்கி சோற்றை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை:

செய்முறை:

ஒரு மண் பானையில் எள் எண்ணெயை ஊற்றி சூடாக்கிய பிறகு, விளக்கெண்ணெயை ஊற்றி சூடேற்றி அதில் நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள அனைத்து சாறுகளையும் ஊற்றி மூடி வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைய்யுங்கள். பிறகு அதை எடுத்து ஆற வைக்க வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

அதன் பிறகு வெள்ளை மிளகை உடைத்து 200 மி.லி பசும்பாலில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே பாலை கொண்டு மை போன்று அரைத்து தைல பானையில் போட்டு வைய்யுங்கள்.

செய்முறை:

செய்முறை:

சந்தனக்கட்டையை எடுத்து மாவு போல பொடியாக்கி 200 மி.லி இளநீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மை போன்று அரைத்து தைல பானையில் போட்டு வைக்க வேண்டும்.

செய்முறை:

செய்முறை:

இப்போது வெட்டி வேரை இடித்து தைல பானையில் போடவும். பிறகு தைல பானையை மீண்டும் கொஞ்சம் தீயில் காய்ச்சி தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி வைய்யுங்கள்.

எப்படி உபயோகிக்க வேண்டும்

எப்படி உபயோகிக்க வேண்டும்

காலை வேளையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு சுடுநீரில் தலைக்கு குளிக்கவும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்றவைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

குறிப்பு

குறிப்பு

இந்த தைலத்தை தேய்த்து தலைக்கு குளித்து வரும் நாட்களில் அதிகம் வெயிலில் அலைய வேண்டாம். மற்றும் தயிர், இளநீர், குளிர் பானம், பழச்சாறு போன்ற குளிர்ந்த நீராகாரங்களை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miracle Medicine Balm For Eye Problem

Miracle Medicine Balm which helps to cure Eye Problem,
Story first published: Saturday, November 21, 2015, 12:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter