For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அணு சக்தி பேரழிவால் மக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகள் - ஆய்வு தகவல்கள்!!!

|

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவிடம் இருந்து அப்படியொரு தாக்குதலை ஜப்பானியர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த தாக்குதலின் பிறகு பொருளாதார ரீதியாக ஜப்பான் மீண்டெழுந்தாலும் கூட, இன்னமும் அதன் தாக்கத்தினால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்பில் இருந்து இம்மியளவு கூட எழுந்திருக்க முடியாமல் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

அணு ஆயுத தாக்கத்தை எதிரில் கண்ட விமானி ஒருவர், விமானம் தரையிறங்கிய நொடியில் இருந்து பித்துப்பிடித்தது போல் ஆகிவிட்டார் என்ற தகவல் அப்போதைய செய்திகளில் வெளியாகியிருந்தது. கண்டவருக்கே அந்த நிலை என்றால், அந்த தாக்கத்தில் சிக்கியர்வர்களின் நிலை? அவர்களது அடுத்தடுத்த சந்ததியினர் தொடர்ந்து அனுபவித்து வரும் வலி?

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

சொல்லிமாளாத, சொல்லில் அடங்காத அந்த வலி மற்றும் பாதிப்புகள். உலகம் முழுதும் அணு ஆயுத பேரழிவுகளின் மூலம் மனிதர்கள் மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி இனி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு

ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு

அணு சக்தியின் பேரழிவுகளினால் இறப்பும், உடல் ரீதியான பாதிப்புகளும் தான் அதிகம் ஏற்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியில், அணு ஆயுத பேரழிவால் மக்களுக்கு ஆழமான மன ரீதியான பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

அணு சக்தி விபத்துகள்

அணு சக்தி விபத்துகள்

கடந்த 60 ஆண்டுகளில் ஐந்து முறை அணு சக்தி விபத்துகள் நடந்துள்ளது. விபத்து நடந்த இடங்கள், ரஷ்யாவின் க்யூஷ்டைம் (1957), வின்ட்ஸ்கேல் (1957), அமெரிக்காவின் த்ரீ மைல் தீவில் (1979), செர்னோபயல் (1986) மற்றும் ஜப்பானின் புகுஷிமா (2011).

மன ரீதியான பாதிப்புகள்

மன ரீதியான பாதிப்புகள்

ஜப்பானின் புகுஷிமா மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், இந்த அணு சக்தி விபத்துகள் நடந்த இடங்களில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்பட்ட மக்களை விட, இந்த விபத்தின் தாக்கத்தினால் மன ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அதிகம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் செர்னோபில் கருத்துக்களம் அறிக்கை

ஐக்கிய நாடுகள் செர்னோபில் கருத்துக்களம் அறிக்கை

கடந்த 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கருத்தறிக்கையில், இந்த அணு ஆயுத விபத்துகளினால் மக்களுக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்தாக கருதப்படுவது மனநில பாதிப்பு என்று கூறியிருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு பிறகும் கூட

20 ஆண்டுகளுக்கு பிறகும் கூட

இந்த விபத்துகள் நடந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மன அழுத்தமும், அதிர்ச்சிகரமான அழுத்த நோயும் சாதாரண அளவை விட பலமடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில்

சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில்

அணு சக்தி விபத்து நடந்த மக்களின் மன அழுத்தத்தை சாதாரண மக்களோடு ஒப்பிடுகையில், ஐந்து மடங்கு அதிகமாக மன அழுத்தத்தினால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் 3% எனில், அணு சக்தி விபத்து ஏற்பட்ட மக்களுக்கு 14.6% என அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

அணு உலைகள்

அணு உலைகள்

முக்கியமாக நாம் அணுவுலை காரணமாக பெரிய ஆபத்துகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. உலகில் உள்ள மொத்த அணு உலைகள் ஏறத்தாழ 431 என கூறப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு அணுவுலைகள் அதிகளவில் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கிறதாம். அதிலும் 21 அணுவுலைகள் உள்ள இடத்தில் 10 லட்சத்திற்கும் மேலான மக்களும், 3 அணுவுலைகள் உள்ள இடத்தில் 30 லட்சத்திற்கு மேலான மக்களும் வாழ்வதாக கூறுகிறார்கள். இங்கு ஏதேனும் விபத்து நேரிட்டால், இது இயற்கை சீரழிவை விட பெரியதாக இருக்கும் என கருதப்படுகிறது.

94,000 மக்கள்

94,000 மக்கள்

ஹிரோஷிமா, நாகசாகி தாக்கத்தின் போது பாதிக்கபப்ட்ட 94,000 மக்களுக்கு உயிர்கொல்லி நோயான புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டது ஐந்து ஆண்டுகள் கழித்து தான் தெரியவந்ததாம். இது, அணு உலை விபத்துகளிலும் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

அணு ஆயுத பேரழிவின் விளைவுகள்

அணு ஆயுத பேரழிவின் விளைவுகள்

கட்டுப்படுத்த முடியாத புற்றுநோய் தாக்கம். உணவு பொருட்களிலும், மண்ணிலும் கூட இதன் தாக்கம் ஊடுருவும். இதனால், உணவு தயாரிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். முக்கியமாக பிஞ்சு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இதன் மூலம் ஏற்படும் தாக்கம் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mental Health Suffers Major Nuclear Accidents Studies Find

Do you know about the affects happened after the nuclear disaster on people? read here.
Desktop Bottom Promotion