For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஏன் இரவில் நிர்வாணமாக தூங்க வேண்டும்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்!

|

ஆண்களின் அந்தரங்க இடத்தில் அடிப்பட்டால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம். உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதும் கூட விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் குறையலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது.

இரவில் ஆண்கள் இறுக்கமான உள்ளாடை, பேன்ட் போன்றவற்றை அணியாமல் நிர்வாணமாக உறங்குவதால் விந்தணு உற்பத்தி அதிகரித்து, குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய ஆய்வின் தகவல்களின் மூலம் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனிதவளம் நிறுவனம்

தேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனிதவளம் நிறுவனம்

லண்டன், மேரிலாந்து பகுதியில் இருக்கும் தேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனிதவளம் நிறுவனம் ( National Institute of Child Health and Human Development ) மற்றும் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகம் (Standford University) இணைந்து நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்

இந்த ஆய்வில் 500 ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். மற்றும் இவர்களை வைத்து ஏறத்தாழ 12 மாதங்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முறை

ஆய்வு முறை

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 500 ஆண்களின் உள்ளாடை தேர்வு முதல் அவர்கள் அணியும் முறை மற்றும் அவர்களது விந்து திறன் முதலியவை ஆய்வு செய்யப்பட்டது.

நிர்வாணமாக உறங்குபவர்கள்

நிர்வாணமாக உறங்குபவர்கள்

இறுக்கமான உள்ளாடைகளை பகலிரவில் அணியும் ஆண்களோடு ஒப்பிடுகையில், பகலில் பாக்ஸர்ஸ் மற்றும் இரவில் நிர்வாணமாக உறங்கும் ஆண்களின் விந்தில் 25% குறைவாக தான் டி.என்.ஏ துண்டாகிறது என்று இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விந்தணு திறன் குறைபாடு

விந்தணு திறன் குறைபாடு

நாள் முழுக்க இறுக்கமான முறையில் உள்ளாடை அணியும் ஆண்களுக்கு விந்தணு திறனில் குறைபாடு ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைகிறது

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைகிறது

இரவில் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிந்து உறங்குவதால் ஏற்படும் உஷ்ணத்தால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது.

ஷெபீல்ட் ஆய்வாளர்

ஷெபீல்ட் ஆய்வாளர்

இது குறித்து ஷெபீல்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் ஏலன் கூறுகையில், "இறுக்கமான உள்ளாடை அணிந்து உறங்கும் போது அதிகரிக்கும் வெட்பம், விதைப்பைகளை பாதிக்கிறது இதனால் விந்தின் திறன் குறைகிறது என்று கூறியுள்ளார்.

கருத்தரிக்கும் வாய்ப்பு

கருத்தரிக்கும் வாய்ப்பு

ஐரோப்பாவில் மூன்றில் ஒரு ஆணும், ஐந்தில் ஒரு பெண்ணும், இரவில் நிர்வாணமாக உறங்க முற்படுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், இது அவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று மேலும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் ஏன் நிர்வாணமாக தூங்க வேண்டும்

பெண்கள் ஏன் நிர்வாணமாக தூங்க வேண்டும்

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இரவில் நிர்வாணமாக (அ) உள்ளாடை இன்றி தூங்குவது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இரவில் இறுக்கமாக உள்ளாடை அணிந்து தூங்குவதால் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.

அப்பாவாக ஆசைப்படும் ஆண்களுக்கு

அப்பாவாக ஆசைப்படும் ஆண்களுக்கு

அப்பாவாக ஆசைப்படும் ஆண்கள் குறைந்தபட்சம் கொஞ்சம் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்ப்பதாவது நல்லது என்று ஆய்வளார்கள் கூறியுள்ளனர். அல்லது உள்ளாடைக்கு பதிலாக இரவில் பாக்ஸர்ஸ் (Boxers) அணிந்து உறங்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், ஆண்களின் அந்தரங்கள் பகுதியில் சூடு / வெட்பம் அதிகரிக்க கூடாது என்று இவர்கள் கூறியிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men Should Sleep Naked At Night To Improve Sperm Tamil

A recent study says, men should sleep naked at night to improve sperm, read here in tamil.
Desktop Bottom Promotion