ஆர்.ஓ குடிநீர் குடிப்பது பொது மக்களின் உடல்நலத்துக்கு தீங்கானதா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

இங்கு ஆர்.ஓ குடிநீர் குடிப்பது பொது மக்களின் உடல்நலத்துக்கு தீங்கானதா? என்பதை குறித்துக் கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

இன்றைய சூழலில் இயற்கையின் ஐம்புலன்களும் விற்பனை பொருளாகிவிட்டது. அதில் நிலமும், நீரும் தான் மக்களை பிரித்து வைத்து சண்டைகளை உண்டாக்கும் பொருளாக உருமாறி நிற்கிறது. உணவு இன்றி கூட மனிதன் வாழ்ந்து விட முடியும் ஆனால், நீர் இன்றி மூன்று நாள் தாக்குப்பிடிப்பதே சிரமம்.

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!!!

இன்று, நீரில் மாசுப்பாடு அதிகரித்து வருவதனால், நிறைய சுத்தீகரிப்பு நீர் விற்பனையும், கருவிகளும் சந்தையில் விற்கப்படுகிறது. இதில் மிக முக்கியமாகவும், பிரபலமாகவும் விற்கப்படுவது ஆர்.ஓ குடிநீர். இம்முறையில், நீர் நல்ல முறையில் சுத்தீகரிக்கப்படுவதாய் மக்கள் நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!!

ஆனால், இப்போது இந்த ஆர்.ஓ சுத்தீகரிப்பு முறையில் நீரை பருகுவது பொது மக்களின் உடல்நலத்திற்கு தீங்கானது என்று கூறப்படுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடல்நல அபாயம்

ஆர்.ஓ என்பது "Reverse-osmosis" என்னும் முறையுன் சுருக்கமாகும். இது, மிகசிறந்த கண்டுப்பிடிப்பாக மக்களால் ஆமோதிக்கப்பட்டது. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் இது பொது மக்களின் உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றி எச்சரிக்கின்றனர்.

சுத்தீகரிப்பு முறை

இந்தியாவில் குடிநீர் சுத்தீகரிப்பு முறையில் மிகவும் பிரபலமானது ஆர்.ஓ. சுத்தீகரிப்பு ஆகும். இது, தண்ணீரில் இருக்கும் நச்சுத்தன்மையை வடிக்கட்டவும், ஆர்சனிக் மற்றும் ஃப்ளோரைடு ( arsenic and fluoride) போன்ற பொருள்களை நீக்கவும் செய்கிறது.

சத்து நீக்கம்

இது 92% வரையிலான நச்சுகளை மட்டுமின்றி, மனிதர்களுக்கு நீரில் இருந்து கிடைக்கும் அத்யாவசிய ஊட்டச்சத்துகளான கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துகளையும் நீக்கிவிடுகிறது

உலக சுகாதார அமைப்பு அறிக்கை

உலக சுகாதார அமைப்பு, ஆர்.ஓ முறையில் சுத்தீகரிக்கப்பட்ட நீரை பருகுவது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதகம் விளைவிக்கக் கூடியது என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களின் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை

நச்சுக் கிருமிகள் அழிகிறதா என்று கேள்வி கேட்கும் மக்கள் யாவரும், இது உடல் நலத்திற்கு நல்லதா என்ற கேள்வியை எழுப்புவதில்லை. இதுவே, இந்த நீரின் பயன்பாடு பிரபலமானதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

பாதிப்புகள்

இம்முறையில் சுத்தீகரிப்பதனால் முன்பு கூறியவாறு உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளின் குறைபாடு ஏற்படுகிறது. இந்த சத்தின் குறைபாட்டினால் நிறைய உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது நாள்பட ஏற்படும் பாதிப்பு என்பதால், யாருக்கும் ஆர்.ஓ நீரின் காரணமாக தான் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது தெரிவதில்லை.

உடல்நல ஆபத்துகள்

தொடர்ந்து நீங்கள் ஆர்.ஓ குடிநீர் மட்டும் பருகி வந்தால் இதயப் பிரச்சனை, உடல் சோர்வு, தசை பிடிப்புகள், உடல் வலு இழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.

கனிமச்சத்து

நமது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்த்தை ஆர்.ஓ சுத்தீகரிப்பு முறை குறைத்துவிடுகிறது. இதனால், கனிமச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். இது, வளர்ச்சிதை மாற்றத்திற்கும் சீர்கேடு செய்கிறது.

நீரின் முக்கியத்துவம்

ஓர் மனிதனின் உடலின் செயல்பாட்டில் நீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நீர் இன்றி அமையாது உலகு மட்டுமல்ல, உடல்நலமும் தான். எனவே, உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் முறையில் நீரை சுத்தீகரிப்பு செய்து குடித்தாலே போதுமானது.

செப்பு பாத்திரங்கள்

நமது முன்னோர்கள் அந்த காலத்தில் நீரை குடிக்கவும், சேமித்து வைக்கவும் செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தினர். ஏனெனில், செப்பு மற்றும் பித்தளை போன்றவை நீரில் இருக்கும் நச்சுகளை இயற்கையான முறையில் நீக்கும் தன்மை கொண்டவை.

பாசம் பிடித்தல்

செப்பு / பித்தளை பாத்திரங்களில் நீர் பிடித்து வைத்தால் ஓரிரு நாட்களில் அடியில் பாசம் பிடித்திருக்கும். அதுதான், அதன் சுத்தீகரிப்பு முறை ஆகும். தினமும் இந்த பாத்திரங்களை கழுவி நீரை பிடித்து வைத்து பருகினாலே உங்கள் உடல்நலம் மேலோங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Is the RO filter system a threat to public health

Is the RO filter system a threat to public health? for more info read here
Story first published: Wednesday, May 27, 2015, 11:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter