For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமாக உண்ணுவதற்கு சுவாரஸ்யமான சில புதிய விதிமுறைகள்!!!

By Ashok CR
|

ஆரோக்கியமாக உண்ணுவது என வரும் போது, பலரும் பின்பற்றக்கூடிய பழமையான சில டிப்ஸ் உள்ளது. ஆனால் புதிய வளர்ச்சிகளும், ஆராய்ச்சிகளும் ஆரோக்கியமாக உண்ணுவதற்கு புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவ்வகையான சில சுவாரஸ்யமான புதிய விதிமுறைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோலோடு சேர்த்து கேரட்டை உண்ணுங்கள்

தோலோடு சேர்த்து கேரட்டை உண்ணுங்கள்

கேரட்டில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற்றிட விருப்பமென்றால், அதனை உண்ணுவதற்கு முன், தோலை நீக்காமல் அவற்றை நன்றாக கழுவிடுங்கள். கேரட்டின் தோலில் உள்ள சத்து எவ்வளவு தெரியுமா? தோல் சீவப்பட்ட கேரட்டில் இருக்கும் அதே அளவிலான சத்து, அதன் தோலிலும் இருக்கும்.

கசக்கும் உணவுகளை உண்ண பழகிக் கொள்ளுங்கள்

கசக்கும் உணவுகளை உண்ண பழகிக் கொள்ளுங்கள்

பொதுவாக கசப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்ணுவதென்றால் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் கசப்பான சுவையைக் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்களும், அதிக உடல்நல பயன்களும் உள்ளது. பாகற்காயை உதாரணமாய் எடுத்துக் கொண்டால், அதில் ஊட்டச்சத்து அதிகம்; கசுப்புத்தன்மை இருக்கும் போதிலும் கூட அவற்றில் வைட்டமின்களும், கனிமங்களும் அதிகம்.

கீரையை சேமித்து வைப்பதற்கு முன் வேரை வெட்ட வேண்டும்

கீரையை சேமித்து வைப்பதற்கு முன் வேரை வெட்ட வேண்டும்

உங்களுக்கான மற்றொரு சுவாரஸ்யமான தகவல் இதோ - பின்னாள் பயன்படுத்துவதற்காக கீரையை சேமிக்க வேண்டுமானால், அதன் வேரை வெட்டி, நீரில் அலசி, காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். அப்போது தான் அவை பாழாகமல் அதிக ஊட்டச்சத்துடன் விளங்கும். நம் வீட்டை அடைந்த பின்னரும் கூட தாவரங்கள் உயிருடன் இருப்பதை பலரும் மறந்து விடுகிறோம். கீரையின் வேரை வெட்டி விடுவதன் மூலம் செடியின் மீதான தற்காப்பு உத்தியாக அது அமையும். இதனால் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் இதில் நான்கு மடங்குகள் அதிகரிக்கும். இதனால் இதன் இலைகள் அதிக ஊட்டச்சத்துக்களுடன் விளங்கும்.

அடர்ந்த நிறத்திலான உணவுகளை கருதவும்

அடர்ந்த நிறத்திலான உணவுகளை கருதவும்

வெளிறிய நிறத்திலான காய்கறிகள் மற்றும் பழங்களை விட அடர்ந்த நிறத்திலான காய்கறிகள் மற்றும் பழங்களே ஆரோக்கியமானது. அடர்ந்த நிறத்திலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அந்தோசையானின் என்ற ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. பிற தாவர ஊட்டச்சத்துக்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஊட்டச்சத்து மிகவும் ஆரோக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting New Rules Of Healthy Eating

When it comes to eating healthy, there are some age-old tips that many people follow. But new developments and research has led to the creation of new rules of healthy eating. Here are some of the interesting new rules that you should know about.
Story first published: Friday, July 17, 2015, 14:53 [IST]
Desktop Bottom Promotion