For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி?

By Ashok CR
|

ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும். நுரையீரலில் இருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கிய செயலை இது செய்கிறது. இதனால் வாழும் அணுக்கள் சரியான முறையில் செயல்படக் கூடும். அணுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துச் சென்று, மீண்டும் அதனை நுரையீரலில் கொண்டு சேர்க்க ஹீமோகுளோபின் உதவும்.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்திட ஹீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இரத்தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இயல்பான அளவு, கீழ்வருமாறு:

* வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி.
* வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி.

இந்த அளவு பெரியவர்களுக்கானது. இந்த அளவு ஒவ்வொரு ஆய்வுகூடங்களிலும் லேசான வேறுபாட்டோடு இருக்கலாம். அதற்கு காரணம் வெவ்வேறு முறைகள் மற்றும் அளவீடுகளினாலே. ஹீமோகுளோபின் அளவு குறையும் போது சோர்வு, வலுக்குறைவு, மூச்சடைப்பு, மயக்கம், தலை வலி, வெளிரிய சருமம், உடையக்கூடிய நகங்கள், வேகமான இதயத் துடிப்பு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். கர்ப்ப காலத்திலேயோ அல்லது மாதவிடாய் காலத்திலேயோ பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது இயல்பான ஒன்றே. இருப்பினும், அதற்கு பின்னால் வேறு பல காரணங்களும் இருக்கலாம். அதில் மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவது இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் பி12 குறைபாடுகள் தான். அறுவை சிகிச்சை, விபத்து, அடிக்கடி இரத்த தானம் செய்வது, எலும்பு ஊனை தாக்கும் நோய், புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகள், கீல்வாதம், சர்க்கரை நோய், வயிற்று அல்சர் மற்றும் செரிமான பாதையில் ஏற்படும் பிற நோய்களாலும் கூட இது நடக்கலாம்.

பல நேரங்களில், சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோகுளோபினும் குறைந்துவிடும். ஹீமோகுளோபின் குறைவிற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பொறுத்து, அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இயற்கையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை தொடர வேண்டிய காலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவை பொறுத்தும், அதன் மேம்பாட்டிற்கு எத்தனை முறை உங்கள் மருத்துவர்கள் சோதிக்கிறார்கள் என்பதை பொருத்தும் அமையும்.

ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு 10 வழிகள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து வளமையாக உள்ள உணவுகளை உண்ணுங்கள்

இரும்புச்சத்து வளமையாக உள்ள உணவுகளை உண்ணுங்கள்

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது என நேஷனல் அனீமியா ஏக்ஷன் கவுன்சில் கூறியுள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும். இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட மருந்துகளையும் உண்ணலாம். ஆனால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து ஆபத்தை ஏற்படுத்துவதால், அதனை உட்கொள்வதற்கான சரியான அளவை உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் சி உட்கொள்ளும் அளவை அதிகரிக்கவும்

வைட்டமின் சி உட்கொள்ளும் அளவை அதிகரிக்கவும்

வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமினின் உதவி இல்லாமல் உடலால் இரும்பை முழுவதுமாக உறிஞ்ச முடியாது. வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அதிலும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.

போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளவும்

போலிக் அமிலம் எடுத்துக் கொள்ளவும்

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு ஃபோலேட் அடங்கிய மருந்துகளை தினமும் 200-400 மி.கி. வரை உண்ணலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 1-2 பீட்ரூட்களை அதன் தோலுடன் மைக்ரோ ஓவனில் அல்லது அடுப்பில் போட்டு சமைக்கவும். அதனை ஆற வைத்து பின் தோலை உரிக்கவும் மீடியம் அளவிலான 1 பீட்ரூட், 3 காரட்கள் மற்றும் 1/2 சீனிக் கிழங்கை கொண்டு ஆரோக்கியமான ஜூஸை தயார் செய்யலாம். தினமும் அதனை ஒரு முறை குடிக்கவும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேத்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க தேவையானவை தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள். 1/2 கப் ஆப்பிள் ஜூஸ் மற்றும் 1/2 கப் பீட்ரூட் ஜூஸை ஒன்றாக கலந்து குடிக்கலாம். அதனுடன் கொஞ்சம் இஞ்சி அல்லது எலுமிச்சை ஜூஸை சேர்த்து, இதனை தினமும் இருமுறை பருகுங்கள்.

கருப்பு சர்க்கரைப்பாகு

கருப்பு சர்க்கரைப்பாகு

இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 டீஸ்பூன் சர்க்கரைப்பாகுவை 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் நாற்றும் 1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள். இதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.

மாதுளைப்பழம்

மாதுளைப்பழம்

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். மீடியம் அளவிலான ஒரு மாதுளைப்பழத்தை உண்ணுங்கள் அல்லது காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடியுங்கள். இல்லையென்றால் காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடிக்கவும்.

நெட்டில் (செந்தொட்டு செடி)

நெட்டில் (செந்தொட்டு செடி)

நெட்டில் என்ற செடி உங்கள் ஹீமோகுளோபின் அளவை உயர்த்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் வளமையாக உள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.

1. உலர்ந்த நெட்டில் இலைகளை 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு கப் வெந்நீரில் போடவும்.

2. 10 நிமிடங்கள் அதனை அப்படியே வைத்து விடவும்.

3. பின் அதனை வடிகட்டி, கொஞ்சம் தேனையும் சேர்த்துக் கொள்ளவும்.

4. இதனை தினமும் இரண்டு முறை குடிக்கவும்.

உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் உணவுகள்

உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் உணவுகள்

உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறையாக இருக்கும் போது, இரும்புச்சத்தை உறிஞ்சும் உங்கள் உடலின் திறனை பாதிக்கும் உணவுகளை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி இரும்பு சத்தை தடுக்கும் உணவுகளின் உதாரணங்கள் சில:

- காபி

- டீ

- கோலா

- வைன்

- பீர்

- கடைகளில் கிடைக்கும் அன்டாசிட்

- கால்சியம் அதிகமாக உள்ள உணவுகள் (பால் பொருட்கள்) மற்றும் கால்சியம் மாத்திரைகள்

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தசைகளின் திணிவை அதிகரிக்கவும், சோர்வை எதிர்த்து போராடவும் சில திடமான பயிற்சிகளை செய்திடுங்கள்.

கூடுதல் டிப்ஸ்

கூடுதல் டிப்ஸ்

* பசையம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.

* முழு தானிய பிரட்கள், தானியங்கள் மற்றும் பாஸ்தாக்களை உண்ணுங்கள்.

* உங்கள் மாதவிடாய் காலத்திற்கு பிறகும், கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

* உங்கள் ஆற்றல் திறன் குறைவாக இருக்கும் போது மருந்து கடைகளில் கிடைக்கும் ஊக்கமளிக்கும் மருந்துகளை தவிர்க்கவும்.

* இரத்த ஓட்டத்தை மேம்படுத்த தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Increase Your Hemoglobin Level

Depending on the reason behind the drop in hemoglobin, there are certain natural ways that are effective in restoring it to a normal level. The length of time you’ll need to continue using these remedies depends on your hemoglobin level and how often your doctor checks it for improvement. Here are the top 10 ways to increase your hemoglobin naturally.
Desktop Bottom Promotion