For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? அப்ப இஞ்சியை உணவில் அதிகம் சேத்துக்கோங்க...

By Maha
|

நீங்கள் ஒவ்வொரு நாளும் சோர்வை உணர்கிறீர்களா? அந்த சோர்வைப் போக்குவதற்கு தினமும் ஏராளமான காபியைக் குடிக்கிறீர்களா? முதலில் சோர்வைப் போக்க காபி குடிப்பதை நிறுத்துங்கள். காபியை அதிகமாக குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆனால் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த இஞ்சியை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்தால், சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் இஞ்சி உணவிற்கு நல்ல மணத்தையும் தரும். சரி, இப்போது இஞ்சி எப்படி சோர்வைப் போக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலினுள் உள்ள காயங்கள்

உடலினுள் உள்ள காயங்கள்

இஞ்சியில் உள்ள ஜிங்ஜெரால் என்னும் கலவை மிகவும் சக்தி வாய்ந்த ஓர் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள். இது நாள்பட்ட சோர்வை ஏற்படுத்தும் பிரச்சனைகளான இதய நோய் அல்லது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

பாக்டீரியா தொற்றுக்களைக் குறைக்கும்

பாக்டீரியா தொற்றுக்களைக் குறைக்கும்

உடலில் சோர்வு ஏற்படுவதற்கு தொற்றுக்களும் ஓர் காரணம். இந்த தொற்றுக்களைத் தடுக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக இஞ்சி சிறந்த நேச்சுரல் ஆன்டி-பயாடிக் என்பதால், பாக்டீரியாக்களால் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். எனவே உடலினுள் உள்ள தொற்றுக்களை அழிக்க, வாரம் 2-3 முறையாவது இஞ்சியை சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வாருங்கள்.

வைரஸ் தொற்றுகள் நீங்கும்

வைரஸ் தொற்றுகள் நீங்கும்

குளிர் அல்லது மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்வற்றால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாவோம். இவைகள் ஒருமுறை உடலைத் தாக்கினால் உடலில் உள்ள ஆற்றல் முழுமையாக போய்விடும். மேலும் சாதாரண நிலைக்குத் திரும்ப 1 வாரம் ஆகும். ஆனால் இப்பிரச்சனைகள் இருக்கும் போது ஆன்டி-வைரல் தன்மை அதிகம் நிறைந்த இஞ்சி சாற்றினைக் குடித்து வந்தால், சளி, இருமலுக்கு காரணமான வைரஸ்கள் அழிக்கப்பட்டு, விரைவில் உடல் குணமாவதோடு, சுறுசுறுப்புடனும் இருக்கும்.

இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படும்

இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படும்

உடலில் மிகுந்த சோர்வை உணர்வதற்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் காரணம். இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க வேண்டுமெனில், இஞ்சியை சாறு எடுத்து குடியுங்கள். இதனால் இரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, அதனால் ஏற்படும் சோர்வு நீங்கும்.

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வலியுடன், மிகுந்த சோர்வும் இருக்கும். இதனை இஞ்சியில் உள்ள குர்குமின் சரிசெய்யும். மேலும் ஆய்வுகளில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இஞ்சியை ஒரு கிராம் அளவில் எடுத்து வந்தால், இப்பிரச்சனைகள் நீங்குவதாக தொரிய வந்துள்ளது.

மனநிலை புத்துணர்ச்சியடையும்

மனநிலை புத்துணர்ச்சியடையும்

இஞ்சி உடல் அழுப்பைப் போக்க மட்டுமின்றி, மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவும். எனவே உங்களுக்கு மனநிலை சரியில்லையென்றால், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் மனநிலை மேம்பட்டு, சுறுசுறுப்போடு இருப்பதை உணர்வீர்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்

இஞ்சியில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதோடு, இது நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் சிறந்த பொருளும் கூட. இதன் மூலம் இஞ்சியைக் கொண்டு எப்பேற்பட்ட நோய்களையும் எதிர்த்துப் போராட முடியும். மேலும் இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இதனால் முதுமைத் தோற்றமும் தள்ளிப் போடப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Ginger Can Make You Much More Energetic Every Day

Here’s how ginger can make you feel more energetic every day. Take a look...
Desktop Bottom Promotion