For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! இதோ இயற்கை முறையில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க சில வழிகள்!

|

ஆண்களுக்கு இப்போதெல்லாம் ஏற்படும் மிகபெரிய பிரச்சனையே ஆண்மை தான். ஆம்! நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆண்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது இருக்கின்ற ஆண்களுக்கு ஆண்மை தன்மை 60% குறைவாக தான் இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உலகம் முழுதும் இருக்கின்ற ஆண்கள் அனைவருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய ஆண்களும் இந்த பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கின்றனர். எதனால் இப்படி திடீரென ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைய காரணம்? உலக அளவில் பெரும்பாலான மருத்துவ குழுமங்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு தான் நிறைய ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டிருகின்றனர்.

இதை இயற்கை முறையிலேயே சரி செய்துவிடலாம். சரியான உணவு முறையை பின்பற்றுவது மட்டும் போதாது. உடலளவிலும் நிறைய பின்பற்ற வேண்டியிருக்கிறது இந்த ஆண்மையியக்குநீரை (டெஸ்டோஸ்டிரோன்) இயற்கை முறையில் அதிகரிக்க செய்ய. ஓர் ஆணுக்கு, தான் ஆண் என நிரூபிக்க அவசியமான ஒன்று இந்த டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சுரப்பி. இது இருந்தால் தான் விந்துநீர் உற்பத்தியாகும்.

பல ஆண்களுக்கு சரியான அளவில் விந்துநீர் உற்பத்தியாகாது இருப்பது போன்றவைக்கு எல்லாம் தலையாய பிரச்சனையாக விளங்குவது ஆண்மையியக்குநீரின் (டெஸ்டோஸ்டிரோன்) சுரப்பி சுரக்காதிருப்பது தான். இதை மருத்துவ ரீதியிலும் சரி செய்யலாம், ஆனால் நீண்ட நாள் பயனளிக்குமா என சொல்ல இயலாது. இதற்கு இயற்கை முறையில் சுலபமாக தீர்வுக்காண இயலும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக்கட்டுப்பாடு

உணவுக்கட்டுப்பாடு

ஆண்கள், டெஸ்டோஸ்டிரோன் சுரக்க நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் முக்கியமாக நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம். நல்ல கொழுப்புச்சத்து டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்க உதவுகிறது. சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற அற்ற உணவுகளையும், தின்பண்டங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேக வைத்த காய்கறிகளும், ஃப்ரஷ்ஷான பழங்களையும் சாப்பிடுவது நல்லது.

ரசாயன கலப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்

ரசாயன கலப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதில் குறைப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இரசாயன கலப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தான். முக்கியமாக பேக்கிங் செய்த உணவுகள், ஜூஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது அவசியம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரக்க, புல்-அப்ஸ், டெட் லிப்ட் (Deadlift) பெஞ்ச் பிரஸ் (Bench press) போன்ற உடற்பயிற்சிகளும் மற்றும் உட்கார்ந்து எழுந்து வேலை செய்வது போன்றவையும் உதவுகிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரப்பில் குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் அதிகமாக இருப்பது தான். இது டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை 3௦% வரை குறைக்க வாய்ப்பிருக்கிறது என கூறுகின்றனர்.

உடலுறவில் ஈடுபடுதல்

உடலுறவில் ஈடுபடுதல்

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வைக்க, ஆண்கள் அதிகமாக உடலுறவில் ஈடுப்பட வேண்டும். விரைப்புத்தன்மை அதிகரிக்கும் போது டெஸ்டோஸ்டிரோன் சுரப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்

மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்

டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதை பெருமளவு பாதிப்பது குடிப்பழக்கம் தான். கிட்டத்தட்ட முழுமையாக கூட சுரக்கும் தன்மையை தடுத்துவிடும். எனவே, ஆண்கள் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிக்க குடிப்பழக்கத்தை கட்டாயம் கைவிடுதல் வேண்டும்.

தூக்கம்

தூக்கம்

டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி நன்கு சுரக்க வேண்டும் எனில். நன்கு தூங்க வேண்டும். தூக்கமின்மையில் அவதிப்படும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சரியான அளவு சுரப்பதில்லை. எனவே, ஆண்கள் சரியான நேரத்திற்கு உறங்குதல் அவசியம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தமானது, இயற்கையாக சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவை கூட குறைத்துவிடுகிறதாம். எனவே, ஆண்கள் மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும். அலுவலக வேலையாக இருந்தால் கூட சரியான அளவு ஓய்வெடுப்பது அவசியம்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்

வைட்டமின் ஏ, சி, டி. ஈ, போன்றவை டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியை அதிகரிக்க உதவுகின்றன. மற்றும் செலினியம், ஒமேகா 3 மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகளும் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Boost Testosterone Naturally

Do you know, How to Boost Testosterone Naturally. if no, read here.
Desktop Bottom Promotion