For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

By Maha
|

பொதுவாக காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைத் தான் குடிப்போம். இதனால் உடலின் ஆற்றல் அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருப்பது போல் உணர்வோம். ஆனால் உண்மையில் காபி அல்லது டீயை காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள காப்ஃபைன் அல்லது சர்க்கரை உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...?

அதிலும் காபி ஒரு அசிடிக் மற்றும் காபியை காலையில் குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் எழுவதற்கு உணவுகளே காரணமாக இருக்கின்றன. எனவே உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்களின் உடல் எடையைக் குறைக்கும் காலை உணவுகள்!

அதற்கு முதலில் காபி அல்லது டீயை தவிர காலையில் குடிப்பதற்கு ஏற்ற பானம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக காபி அல்லது டீயை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அளவாக எப்போதாவது குடிக்கலாம்.

சரி, இப்போது காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற வேறு சில ஆரோக்கிய பானங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ

க்ரீன் டீ

கண்டிப்பாக டீ குடித்தாக வேண்டுமென்று தோன்றினால், க்ரீன் டீ குடித்து வாருங்கள். இதனால் உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறைத்து, நன்கு பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.

மோர்

மோர்

காலையில் மோர் குடிப்பதும் மிகவும் நல்லது. இதனால் உடல் வெப்பம் குறைவதோடு, ஆற்றலும் பாதுகாக்கப்படும்.

பால் மற்றும் வாழைப்பழம்

பால் மற்றும் வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை சூடான பாலில் போட்டு, சிறிது தேன் சேர்த்து கலந்து காலையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலும் நீர்ச்சத்துடன் இருக்கும்.

இளநீர்

இளநீர்

காலையில் இளநீரைக் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் மிகவும் நல்ல பானம். மேலும் இளநீரைக் குடித்து வந்தால், உடலானது புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருக்கும்.

மசாலா டீ

மசாலா டீ

நல்ல காரமான மசாலா டீயை காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அதிலும் இஞ்சி, மிளகு, ஏலக்காய், பட்டை போன்றவற்றைக் கொண்டு டீ தயாரித்து குடிப்பது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Drinks To Start The Day

Choose healthy drinks to start the day instead of coffee. Green tea and coconut water are very healthy morning drinks. Read on to know about more drinks...
Desktop Bottom Promotion