For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாங்க முடியாத கோடை வெயிலை எதிர்கொள்ள சில டிப்ஸ்...

By Maha
|

வீட்டில் கூட இருக்க முடியாத அளவில் வெயில் கொளுத்துகிறது. வெயிலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். அப்போது மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் வியர்வையை சுரக்கச் செய்து, உடலின் வெப்பநிலையை உடலில் இருந்து வெளியேற்றும்.

ஆனால் அக்னி நட்சத்திரத்தின் போது, வெயிலின் அளவு அதிக அளவில் இருக்கும். போது, ஹைப்போதலாமஸ் தன் செயல்பாட்டை இழந்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் போகும். அந்நேரத்தில் தான் வியர்க்குரு, வேனிற்கட்டிகள், சிறுநீர்க்கடுப்பு என பல வெப்ப நோய்கள் ஏற்படுகிறது.

எனவே இந்நேரத்தில் ஒருசில மாற்றங்களை தவறாமல் மேற்கொண்டு வந்தால், வெப்ப நோய்களில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெப்ப தளர்ச்சி

வெப்ப தளர்ச்சி

மனித உடலின் வெப்பநிலை சாதாரணமாக 98.4 டிகிரி பாரன்ஹீட். ஆனால் வெயில் அதிகம் அடிக்கும் போது, உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து, அதனால் உடல் சோர்வு, அதிகப்படியான தண்ணீர் தாகம், மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படுவதோடு, சோடியம், பொட்டாசியம், மற்றும் மக்னீசியம் போன்ற உப்புக்கள் வெளியேறி, அதனால் உடல் சோர்ந்துவிடுகிறது. இதற்கு தான் வெப்ப தளர்ச்சி என்று பெயர்.

வெப்ப மயக்கம்

வெப்ப மயக்கம்

வெயிலில் அதிகம் சுற்றினாலோ அல்லது வெயிலில் வேலை செய்பவர்கள் மயங்கி விழுவார்கள். இதற்கு காரணம் இரத்த நாளங்கள் விரிவடைந்து, இடுப்பிற்கு கீழே இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத்தில் இரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், உடனே பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து, ஆடையை தளர்த்தி, குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உடலை ஒற்றி எடுக்க வேண்டும்.

சிறுநீர்க்கடுப்பு

சிறுநீர்க்கடுப்பு

கோடையில் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது, வியர்வை அதிகம் வெளியேறுவது போன்றவற்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறையும். அப்போது சாதாரணமாக காரத்தன்மையுடன் இருக்கும் சிறுநீர் அமிலத்தன்மைக்கு மாறி, அதன் விளைவாக சிறுநீர்க்கடுப்பு ஏற்படும். மேலும் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய உப்புக்கள் சிறுநீர்ப்பாதையில் படிந்து, சிறுநீரக கல்லாகிவிடும். எனவே இவற்றை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

வியர்க்குரு

வியர்க்குரு

கோடையில் வியர்வை அதிகம் வெளியேறுவதால், வியர்க்குரு ஏற்படும். இத்தகைய. வியர்க்குருவைத் தவிர்க்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.

பானங்கள் குடிக்கவும்

பானங்கள் குடிக்கவும்

வாயு நிரப்பப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பதிலாக, இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை குடித்து வந்தால், கோடையில் வியர்வையின் மூலம் உடலில் இருந்து வெளியேறிய சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் கிடைத்து, சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் எலுமிச்சை சாற்றில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால், நீரிழப்பால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக குறையும்.

பழங்களை சாப்பிடவும்

பழங்களை சாப்பிடவும்

கோடையில் கிடைக்கும் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, கொய்யா, பப்பாளி, கிர்னிப் பழம், நுங்கு போன்றவற்றை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். இதனால் உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்படும்.

சிறந்தே கோடைக்கால உணவு

சிறந்தே கோடைக்கால உணவு

கோடையில் கம்மங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், இட்லி, இடியாப்பம், கீரைகள், வாழைத்தண்டு, புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Tips To Beat The Summer Heat

Here are some of the health tips to beat the summer heat. Take a look...
Story first published: Monday, May 25, 2015, 17:04 [IST]
Desktop Bottom Promotion