For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாட உணவில் கேரட்டை அவசியம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Ashok CR
|

கேரட்... கேரட்... கேரட்... கேரட்டில் அத்தனை உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய உடல் ஆரோக்கிய பொருட்கள் அடங்கியுள்ளது. கேரட்டில் உள்ள உடல் நல பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் கண்டிப்பாக அதனை உங்கள் உணவில் சேர்த்திட மறக்க மாட்டீர்கள். ஏபியசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் தான் கேரட். கிரேக்க வார்த்தையான "கேரட்டான்" என்ற வார்த்தையில் இருந்து உருவானது தான் கேரட்.

அமெரிக்க வேளாண்மை துறையின் படி, ஒரு முறை பரிமாறப்படும் அளவு என்பது மிதமான அளவிலான 1 கேரட் அல்லது நறுக்கிய ½ கேரட் ஆகும். இந்த அளவிலான கேரட்டில் 25 கலோரிகள், 6 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 3 கிராம் சர்க்கரை மற்றும் 1 கிராம் புரதம் அடங்கியுள்ளது.

கேரட்டில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, வைட்டமின் கே, பொட்டாசியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், மக்னீசியம், ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் அடங்கியுள்ளது. கேரட்டை இன்னும் சிறப்புக்குள்ளாக்குவது மற்றுமொரு பொருள். அது தான் பீட்டா-கரோடின் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட். இது தான் கேரட்டிற்கு அடர்ந்த ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது.

சரி, கேரட்டில் வாய் வலிக்க கூறும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதைப் பார்த்தோம். ஊட்டச்சத்துக்களே இவ்வளவு என்றால் அதனால் கிடைக்கும் உடல் நல பயன்கள் எவ்வளவு இருக்கும்? வாங்க, அதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Secrets Of Carrots

There are a lot of health benefits of carrots, but you also need to know to the health secrets of carrot. Here is the list of things.
Desktop Bottom Promotion