For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

By Maha
|

பலருக்கும் கொய்யா பழத்தின் நன்மைகளைப் பற்றி தான் தெரியும். ஆனால் கொய்யா பழத்தின் இலையில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

ஏனெனில் கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

சரி, இப்போது அந்த கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையைக் குறைக்க உதவும்

எடையைக் குறைக்க உதவும்

கொய்யா இலையின் மூலம் விரைவில் உடல் எடையின் மாற்றத்தைக் காணலாம். அதற்கு கொய்ய இலையை அரைத்து சாறு எடுத்து, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் காம்ப்ளக்ஸ் ஸ்டார்ச்சுகள் சர்க்கரைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும்.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோய் இருப்பவர்கள், கொய்யா இலையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். அதிலும் இந்த டீயை தொடர்ந்து 12 வாரங்கள் குடித்து வந்தால், இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் கொய்யா இலை கல்லீரலுக்கான சிறந்த டானிக் எனலாம்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

செரிமானத்தை அதிகரிக்கும்

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வயிற்று வலி

வயிற்று வலி

கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், 8 கொய்யா இலையை, 1 1/2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர, வயிற்று வர நீங்கும்.

மூச்சுக்குழாய் அழற்சி

மூச்சுக்குழாய் அழற்சி

மூச்சுக்குழாய் அழற்சியால் கஷ்டப்பட்டு வந்தால், கொய்யா இலையின் டீயை குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைப்புண், பல் வலி, ஈறு நோய்கள்

தொண்டைப்புண், பல் வலி, ஈறு நோய்கள்

பிரஷ்ஷான கொய்யா இலை பல் வலி, ஈறு பிரச்சனைகள் மற்றும் வாய்ப் புண், தொண்டைப்புண் போன்வற்றை சரிசெய்ய உதவும். அதற்கு அதனை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது அதனை டீ போட்டு குடிக்கலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

கொய்யா இலை ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் விரைப்பை வீக்கம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவும்.

விந்தணு உற்பத்தி

விந்தணு உற்பத்தி

ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

கொய்யா இலை டீ செய்முறை

கொய்யா இலை டீ செய்முறை

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Guava Leaves

These health benefits of guava leaves will amaze you. The guava leaf juice and tea is highly beneficial for health, so make sure you indulge in it.
Desktop Bottom Promotion