For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மதுவை அளவுக்கு அதிகமாக பருகினால் தான் உயிருக்கு உலை வைக்குமே தவிர, அளவாக பருகினால் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்.

இத்தகைய ஆல்கஹாலில் பல உள்ளன. அதில் இதுவரை நாம் விஸ்கி, பீர், ரெட் ஒயின், வோட்கா போன்றவற்றின் நன்மைகளைப் பார்த்துள்ளோம். இப்போது இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மிலிட்டரி சரக்கு என்று சொல்லப்படும் ரம் நன்மைகளைப் பற்றி தான்.

ரம் என்பது கரும்பு சாற்றினை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுவதாகும். சரி, இப்போது ரம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு அவுன்ஸ் ரம் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், ரம் குடித்து வர மன அழுத்தம் நீங்கி, மனம் ரிலாக்ஸாக இருக்கும்.

இதய நோய்

இதய நோய்

ரம்மை அளவாக குடித்து உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால், 50% இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரக புற்றுநோய்

சிறுநீரக புற்றுநோய்

பல வருடங்களாக அளவாக ரம் குடித்து வந்தவர்களை பரிசோதித்ததில், குடிக்காதவர்களை விட, குடித்து வந்தவர்களுக்கு 38% சிறுநீரக புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.

அல்சைமர்

அல்சைமர்

ரம் குடித்து வந்தால், வயதாகும் காலத்தில் ஏற்படும் அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தைராய்டு புற்றுநோய்

தைராய்டு புற்றுநோய்

ரம் குடிப்பதன் மூலம் தைராய்டு புற்றுநோய் வரும் வாய்ப்பு தடுக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Drinking Rum

Here are some of the health benefits of drinking rum. Take a look...
Story first published: Tuesday, April 14, 2015, 18:40 [IST]
Desktop Bottom Promotion