For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

By Maha
|

விளக்கெண்ணெய் பழமையான எண்ணெய்களில் ஒன்று. பெரும்பாலும் விளக்கெண்ணெயை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு தான் அதிகம் பயன்படுத்துவோம். குறிப்பாக கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவி புரியும். ஆனால் இதில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்களால் இது பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.

குறிப்பாக இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு மலச்சிக்கல், மூட்டு வலிகள் போன்றவற்றையும் குணப்படுத்தலாம். இங்கு விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

விளக்கெண்ணெய் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கி, நோய்களை எதிர்த்துப் போராடும். மேலும் ஆய்வு ஒன்றில், விளக்கெண்ணெயை கொண்டு உடலை மசாஜ் செய்யும் போது, அது இரத்த வெள்ளையணுக்களின் அளவை 24 மணிநேரத்திற்குள் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

பிரசவ வலியைத் தூண்டும்

பிரசவ வலியைத் தூண்டும்

நிறைய கப்பிணி பெண்களுக்கு பிரசவ வலியைத் தூண்ட விளக்கெண்ணெயை சாப்பிட கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அதில் உள்ள ரிச்சினோலியின் அமிலம் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி, சுகப்பிரசவம் நடைபெற உதவும். இருப்பினும் பெரும்பாலான பெண்களுக்கு குமட்டல் ஏற்படுவதால், சிலருக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

படர்தாமரை

படர்தாமரை

விளக்கெண்ணெயில் உள்ள அன்டிசைலினிக் ஆசிட், பூஞ்சை தொற்றுகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது படர்தாமரை உள்ள இடத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், படர்தாமரை விரைவில் குணமாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் நீங்கள் அவஸ்தைப்பட்டால், விளக்கெண்ணெயை வெதுவெதுப்பான பாலில் சிறு துளிகள் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள ரிச்சினோலினிக் ஆசிட் குடல் மற்றும் வயிற்றை சுத்தம் செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும். குறிப்பாக இப்படி மாதம் ஒருமுறை செய்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளிவந்துவிடும்.

மூட்டு வலிகள்

மூட்டு வலிகள்

மூட்டு வலியால் நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டு வந்தால், விளக்கெண்ணெய் கொண்டு வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்யுங்கள். இதனால் மூட்டு வலி குறைவதோடு, நரம்புகளில் உள்ள வீக்கங்கள் மற்றும் தசைகளில் ஏற்பட்ட காயங்கள் குணமாகும். அதிலும் உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் எனில், இந்த எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மருக்கள்

மருக்கள்

விளக்கெண்ணெய் மருக்களை நீக்கவும் பயன்படுகிறது. அதற்கு விளக்கெண்ணெயில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நாளடைவில் மரு உதிர்ந்துவிடும்.

அலர்ஜியை குணமாக்கும்

அலர்ஜியை குணமாக்கும்

விளக்கெண்ணெயை வாய்வழியாக எடுத்து வந்தால், அலர்ஜியை குணமாக்கலாம். ஏனெனில் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி, உடலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கும். ஆனால் இதனை வாய்வழியாக எடுக்கும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Castor Oil

Mostly known for its hair and skin benefits, castor oil has some amazing therapeutic advantages not many of us are aware of. Here are a few...
Story first published: Monday, March 30, 2015, 17:58 [IST]
Desktop Bottom Promotion