For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறிந்திராத மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

சமையலில் காரத்திற்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் மிளகு. இந்த மிளகு பார்க்க சிறியதாக இருந்தாலும், அதில் நிறைந்துள்ள நன்மைகளோ ஏராளம். பலரும் மிளகு சமையலில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் இந்தியா மற்றும் பல நாடுகளில் மிளகு மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதில் நிறைந்துள்ள குணப்படுத்தும் தன்மைகள் தான் காரணம்.

இங்கு அத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மிளகின் நன்மைகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள். சரி, இப்போது மிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆன்டி-பாக்டீரியல்

ஆன்டி-பாக்டீரியல்

மிளகில் ஆன்டி-பாக்டீரியல் அதிக அளவில் இருப்பதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

நோயெதிர்ப்பு அழற்சி தன்மை

நோயெதிர்ப்பு அழற்சி தன்மை

உங்களுக்கு ஆஸ்துமா, நாள்பட்ட மூட்டு வலி போன்றவை இருந்தால், உணவில் மிளகு அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.

ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள்

ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள்

மிளகில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் மிளகு இரத்த சுத்தப்படுத்தி, உடலில் இருக்கும் ப்ரீ-ராடிக்கல்களை வெளியேற்றிவிடும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

உங்களுக்கு வயிறு சரியில்லை என்றால், மிளகு சாப்பிடுங்கள். ஏனெனில் மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைக்கு நல்ல தீர்வைத் தரும். மேலும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றையும் போக்கும்.

வெண்புள்ளி நோய்

வெண்புள்ளி நோய்

நிறமிகளின் குறைபாட்டினால் வெண்புள்ளி நோய் உள்ளவர்கள், மிளகை பயன்படுத்துவது நல்லது. மேலும் பல வருடங்களாக, ஆயுர்வேத மருத்துவத்தில் வெண்புள்ளி நோயை குணப்படுத்த மிளகு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் மிளகு சேர்க்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஆயின்மெண்ட்டை சருமத்தில் தடவி வந்தால், நிறமிகளின் உற்பத்தி அதிகரித்து, வெண்புள்ளி நோய் குணமாகும்.

கொழுப்பைக் கரைக்கும்

கொழுப்பைக் கரைக்கும்

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மிளகை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். ஏனெனில் மிளகு உடலில் சேரும் கொழுப்புக்களை உடைக்கும். அதிலும் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொண்டு வரும் போது, இதனை சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். அதுமட்டுமின்றி, மிளகு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பையைக் கரைக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Black Pepper You May Not Have Heard Of

Here are the reasons why black pepper should be a part of your cooking. Want to know more health benefits of black pepper you may not have heard of? Take a look...
Desktop Bottom Promotion