For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சறை பெட்டிய கண்டா, அஞ்சி ஓடும் நோய்கள்!

|

அஞ்சறை பெட்டி! தினந்தோறும் நாம் சமையல் அறையில் பயன்படுத்தி வரும் நறுமணப் பொருட்கள் ஆகும். இது, சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தையும் கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்யும் தன்மை வாய்ந்ததும் ஆகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள்.

மஞ்சளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

வாழ்க்கையும், அஞ்சறை பெட்டியும் ஒன்றுதான். அனைத்து சுவைகளையும் கலந்த ஒன்று. இது இன்றி எப்படி உணவு சுவைக்காதோ. அதே போல தான், கலவையான உணர்வுகள் இன்றி வாழ்க்கை சுவைக்காது. அஞ்சறை பெட்டியை பயன்படுத்தாத சமையல் அறை நறுமணம் இன்றி தான் இருக்கும். இன்ப துன்பம் கலந்திடாத வாழ்க்கையும் சுவாரஸ்யம் இன்றி தான் இருக்கும். அஞ்சறை பெட்டி ஒரு வாழ்க்கை தத்துவம். இனி, அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்களின் மூலம் நாம் அடையும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்

மஞ்சள்

நறுமணப் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண்ணை சரி செய்யவும் உதவுகிறது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.

மல்லி

மல்லி

மணக்கும் மல்லி, பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவின் சுவையை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.

சீரகம்

சீரகம்

தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் காலமாற்றத்தினால் ஏற்படும் சளித் தொல்லையைக் கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.

கசகசா

கசகசா

கரகரவென இருக்கும் கசகசா வயிற்று வலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். மற்றும் நல்ல தூக்கம் தரும்.

மிளகு

மிளகு

மிளகு சாப்பிடும் போது காட்டமாகவும், காரமாகவும் இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

கிராம்பு

கிராம்பு

கிராம்பு அசைவ உணவுகளின் சுவையை அதிகரிக்க மட்டுமல்ல.., தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறு வலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்ல ஆரோக்கியம் தரும். ஆனால், சரியான அளவு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Anjarai Petty

Anjarai Petty is masala box which contains some of provision items. Actually those items are more effective for our health, Read here.
Desktop Bottom Promotion