For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? ஈஸியாக சரிசெய்யலாம்!

By Maha
|

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி உடலில் சேர வேண்டும். அதே சமயம் உடலில் சேரும் கழிவுகளும் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், வயிற்றை உப்புசத்துடனும், வயிற்றில் வலியையும், வாய்வுத் தொல்லை, மேல் வயிற்றில் எரிச்சல், பசியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். இதற்கு காரணம் வயிற்றில் உணவை செரிக்கத் தேவைப்படும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரப்பதே ஆகும்.

பொதுவாக இத்தகைய நிலை காரமான உணவையோ அல்லது கொழுப்புக்கள் நிறைந்த உணவையோ அல்லது அளவுக்கு அதிகமாக உட்கொண்டாலோ தான் ஏற்படும். உங்களுக்கு செரிமானமின்மை ஏற்பட்டிருந்தால், அதனை ஒருசில உணவுப் பொருட்களின் மூலம் சரிசெய்யலாம்.

இங்கு செரிமானப் பிரச்சனைக்கு உதவும் ஒருசில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வீட்டிலேயே எளிமையாக கிடைக்கக்கூடியவை. சரி, இப்போது அந்த உணவுப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் நீரில் கலந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சோம்பு

சோம்பு

சோம்பை வறுத்து, அதனை சலித்து, பின் அதில் 1/2 டீஸ்பூன் சோம்பு பொடியை நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 2 டீஸ்பூன் சோம்பை நன்கு தட்டி, கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் சுரக்கும் அமிலம் சரியாக சுரக்கப்பட்டு, ஜீரணப் பிரச்சனை நீங்கும்.

இஞ்சி

இஞ்சி

2 டீஸ்பூன் இஞ்சி சாற்றுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். வேண்டுமெனில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 டம்ளர் நீரில் கலந்து, அதனை குடித்து வந்தால், வயிற்று உப்புசம் நீங்கும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

வயிறு நிறைய உணவு உண்ட பின்னர், ஒரு கப் மூலியை டீ குடித்தால், செரிமானமின்மை நீங்கும். அதிலும் புதினா அல்லது இஞ்சியால் செய்யப்பட்ட டீ குடிப்பது மிகவும் நல்லது.

ஓமம்

ஓமம்

கிராமப்புறங்களில் ஜீரண பிரச்சனைக்கு ஓம தண்ணீர் கொடுக்கப்படும். ஆகவே செரிமான பிரச்சனை இருந்தால் ஓம தண்ணீர் குடியுங்கள்.

சீரகம்

சீரகம்

சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால், செரிமான பிரச்சனையால் ஏற்பட்ட வயிற்று உப்புசத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மல்லி

மல்லி

செரிமான பிரச்சனைகளுக்கு மற்றொரு சிறப்பான நிவாரணி மல்லி. 1 டீஸ்பூன் வறுத்த மல்லியை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் மோரில் கலந்து, தினமும் 1-2 முறை பருக வேண்டும்.

துளசி

துளசி

துளவு கூட அற்புதமான ஜீரண பிரச்சனைக்கான பொருள். இதனை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைக் காணலாம். அதற்கு இதனை பச்சையாகவோ அல்லது டீ போன்றோ செய்து குடிக்கலாம். துளசி டீ செய்ய, 1 டீஸ்பூன் துளசியை 1 கப் சுடுநீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி குடிக்க வேண்டும்.

பட்டை

பட்டை

1/2 டீஸ்பூன் பட்டைப் பொடியை, 1 கப் கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, தேன் சேர்த்து கலந்து குடித்தாலும் செரிமான பிரச்சனை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Cure Indigestion

Home remedies will help alleviate symptoms of indigestion. Here are some foods that cure indigestion. Take a look...
Story first published: Tuesday, January 20, 2015, 16:12 [IST]
Desktop Bottom Promotion