For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல்நலத்தை பாதுகாக்க, வேலை செய்யும் இடத்தில் இருந்தவாறே எளிதாக செய்யக் கூடிய பயிற்சிகள்!!!

By John
|

உட்கார்ந்தே வேலை செய்யும் பணியில் உள்ளவரா நீங்கள். அப்படியானால், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் உடல் சோர்வு போன்றவை உங்களை தினமும் பின்னி எடுக்குமே. காலையில் ஒருநாள் கூடு உங்களால் நிம்மதியாய் எழுந்திருக்க முடியாத நிலைகள் கூட ஏற்படும் அல்லவா?

அலுவலகம் செல்வோர் எளிதில் உடல் எடைக் குறைப்பதற்கு உதவும் உணவுப் பழக்கவழக்கம்!!!

உடற்பயிற்சி ஓர் மனிதனுக்கு மிகவும் தேவையானது. குறைந்தப்பட்சம் நடை பயிற்சியாவது. ஆனால், அதற்கு கூட நேரமின்றி வேலையின் பின்னே கழுத்தில் சங்கலி கட்டிய நாய் போல ஓடவிடுகிறது இன்றைய பன்னாட்டு நிறுவன வேலைகள். கவலை வேண்டாம், நீங்கள் வேலை செய்யும் இடத்தில இருந்தவாறே சில உடற்பயிற்சிகளை செய்தால் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்...

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தோள்பட்டை சுழற்சி

தோள்பட்டை சுழற்சி

உங்கள் இரு தோள்பட்டையையும் மெதுவாக முன்னும் பின்னுமாக சுழற்சி முறையில் சுற்ற வேண்டும். நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும். இது உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் இந்த பயிற்சி விடுபெற செய்யும்.

கை சுழற்சி

கை சுழற்சி

உங்கள் இருக்கையில் அமர்ந்தவாறே, உங்கள் இரு கைகளையும் நீட்டி, மணிக்கட்டு பகுதிகளை வலது மற்றும் இடது புறமாக நன்கு சுழற்சி முறையில் சுற்ற வேண்டும். ஐந்து நிமிடங்கள் வரையிலும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இது, கை வலி ஏற்படாமல் இருக்க உதவும்.

கால் நீட்சி பயிற்சி

கால் நீட்சி பயிற்சி

கால்கள் மற்றும் வயிறு பகுதிகளுக்கு நல்ல பயன் தரவல்லது இந்த பயிற்சி. நாற்காலியில் அமர்ந்தவாறே, உங்கள் கால்கள் இரண்டையும் நீராக நீட்டி, உங்கள் இடைக்கு இணையாக வரும் உயரம் வரை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்தல் வேண்டும். 5-10 முறை இது போல செய்தாலே போதுமானது. கடினமாக இருந்தால், உங்களால் எவ்வளவு தூரம் தூக்க இயலுமோ அவ்வளவு செய்தால் கூட போதுமானது.

கட்டிப்பிடித்தல் பயிற்சி

கட்டிப்பிடித்தல் பயிற்சி

உங்கள் இடது கையை வலது தோள்பட்டை மீதும், வலது கையை இடது தோள்பட்டை மீதும், குறுக்கே வைத்து (கட்டிப்பிடித்தல் போல) மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். குறைந்தது மூச்சை ஐந்து நொடிகளாவது அடக்கி விடுவது அவசியம்.

கழுத்தை நீட்டி பயிற்சி

கழுத்தை நீட்டி பயிற்சி

கால்களை சேர்த்து நேராக நிற்க வேண்டும். பின்பு இரு கைகளாலும் கழுத்தை இருப்பக்கம் பிடிக்கவேண்டும். பிறகு கழுத்து மேலும், கீழுமாகவும், வலது, இடமாகவும் அசைக்க வேண்டும். இது, கழுத்து மற்றும் தோள் பகுதிகளின் வலியை குறைக்க உதவும்.

கைகள் உயர்த்தி பயிற்சி

கைகள் உயர்த்தி பயிற்சி

தண்ணீர் பாட்டிலை தம்பல் (Dumbbell) போல பயன்படுத்தி, முழங்கை வரை மடக்கி, நேராக உயர்த்தி பயிற்சி செய்தல் வேண்டும். ஒரே நேரத்தில் இரு கைகளிலும் செய்யாமல், ஒரு கை மாற்றி மறு கையில் செய்வது அவாசியம். இதை நீங்கள் வேலை செய்யும் இடத்தில அமர்ந்தவாறே செய்யலாம். கை வலி ஏற்படாமல் இருக்க இது உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercises you can do at your work desk

To save guard your better health, you can do these exercises from your work desk itself. Take a look.
Story first published: Monday, July 6, 2015, 16:45 [IST]
Desktop Bottom Promotion