தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.

சரி, இப்போது தினமும் பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கல்லீரல் செயல்பாடு

பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

அழற்சியினால் ஏற்படும் வீக்கம் குறையும்

கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் சுத்தமாகும்

உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.

ஸ்டாமினா அதிகரிக்கும்

பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்

ஆய்வுகளில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்.

முதுமை மறதி

2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பீட்ரூட் ஜூஸ் மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், அதனால் முதுமை மறதி நோய் தடுக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பீட்ருட்டில் உள்ள நைட்ரேட், உடலினுள் செல்லும் போது நைட்ரைட்டுகளாக மாறி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Excellent Health Benefits Of Drinking Beetroot Juice

Beetroot juice is naturally strong, sweet and has several health benefits. Read on to know more health benefits of drinking beetroot juice.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter