இந்த தினசரி பழக்கங்கள் தான் முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்கள்!!!

Subscribe to Boldsky

முதுகு வலி, இடுப்பு வலி முன்பெல்லாம் வயதானவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் மட்டும் தான் ஏற்படும் என்ற கூற்று இருந்தது. இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக இருப்பவர்களுக்கு அவ்வப்போது இந்த வலி வரும்.

ஆனால், இன்றைய தொழில்நுட்பம் கலந்த வாழ்வியல் முறையில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல்லு போன முதியவர் வரை இந்த வலியுள்ளது என்று மருத்துவரை தினந்தோறும் அணுகுகின்றனர்.

எந்த ஒரு பிரச்சனையும் காரணமின்றி ஏற்படாது. புற்றுநோய் ஏற்பட எப்படி புகையும், மதுவும் காரணமாக இருக்கிறதோ. அதேப் போல, இந்த முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்படவும் சில காரணங்கள் இருக்கின்றன. அதுவும் உங்களது தினசரி பழக்கங்களில்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உட்கார்ந்தே வேலை செய்வது

பெரும்பாலும் இப்போது முதுகு வலி ஏற்பட காரணமாக இருப்பது ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வது தான். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து ஓர் ஐந்து நிமிடம் நடந்து வாருங்கள். இது முதுகு வலி ஏற்படுவதை தடுக்க உதவும்.

தூங்கும் முறை

எப்போதும் நேராகப் படுத்து உறங்குவது தான் நல்லது. சாய்வாகவும், ஒரு பக்கமாக ஒடுங்கி, ஒருக்கிணைந்து படுப்பதும் காலை வேளையில் கண்டிப்பாக முதுகு/இடுப்பு வலி ஏற்பட காரணமாக இருக்கும்.

உடற்பயிற்சி

சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் கூட முதுகு வலி ஏற்பட ஒரு காரணம் தான். அளவுக்கு அதிகமான வேலை, அலைச்சல் போன்றவற்றில் இருந்து உடலை இலகுவாக உணரச் செய்வது அவசியம்.

ஹை ஹீல்ஸ்

பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பதே இந்த ஹீல்ஸ் அணியும் பழக்கம் தான். இடுப்பு வலி மட்டுமில்லாது, பின்னாளில் பேறு காலங்களிலும் பிரச்சனைகள் எழ இது காரணமாக இருக்கின்றது.

வாகனம் ஓட்டுவது

ஓர் அளவுக்கு மேல் தினசரி இருசக்கர வாகனம் ஓட்டுவதனாலும் முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்பட காரணமாக இருக்கின்றது. உங்கள் பயணம் மணிக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்கிறது எனில், பைக்கை லாக் செய்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்யுங்கள்.

எடை அதிகமான பை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று கூறுவதற்கு காரணம், புத்தக சுமை தான். இவர்கள் மட்டும் அல்ல மார்க்கெட்டிங், சேல்ஸ் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் கூட இதுதான் முதுகு வலி ஏற்பட காரணமாக இருக்கின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

Please Wait while comments are loading...
Subscribe Newsletter