For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உட்கார்ந்த இடத்தில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கான எளிய வழிகள்!!!

|

மன அழுத்தம், நமது உடல்நலத்தையும், மன நலத்தையும் வலுவாக பாதிக்கும் முதல் கருவி. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தம் என்ற வார்த்தையே நிறைய பேருக்கு தெரியாது. ஆனால், இன்றைய நிலையோ, பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் கூட மனம் அழுத்தமாக உணர்வதாக கூறுகின்றனர்.

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

இதற்கு முற்றிலும் காரணமாக இருப்பது நமது வாழ்வியல் மாற்றங்கள் தான். சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க திணறும் நமது மனப்பாங்கு. அகலக்கால் எடுத்து வைக்கும் முயற்சிகள், எதிர்காலத்தை பற்றிய திட்டமிடுதலில் குறைபாடு, மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்று அதிக கவனமாக இருப்பது அல்லது கவனக் குறைவாக இருப்பது.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை!!!

இதுப் போன்ற காரணங்களே மன அழுத்தம் இன்று பூதாகரமாக காட்சியளிக்க உறுதுணையாக இருக்கிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து எப்படி வெளிவருவது? உட்கார்ந்த இடத்தில இருந்தே உங்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரலாம்,இதை எல்லாம் நீங்கள் செய்து வந்தால்....

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனவுக் காணுங்கள்

கனவுக் காணுங்கள்

ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்தவாறு கனவு காண்பது தவறு என்று உங்களது ஆசிரியர் திட்டியிருக்கலாம். ஆனால், இப்போது நீங்கள் தாராளமாக கனவுக் காணலாம். ஃபேண்டஸி திரைப்படங்களில் வருவது போன்ற காட்சிகள், ஓர் ரம்மியமான காதல் கதை, சிங்கங்களே கண்டு அஞ்சிநடுங்கும் ராஜாவாக நீங்கள் இருப்பது போல, எப்படி வேண்டுமானாலும் கற்பனை உலகில் சுற்றி வாருங்கள். உங்கள் மன அழுத்தம் முற்றிலுமாக குறைந்துவிடும். ஒரே எண்ணத்தில் அடைப்பட்டு இருப்பதால் கூட மன அழுத்தம் நீடிக்கலாம்.

 மெக்கானிக் ஆகிவிடுங்கள்

மெக்கானிக் ஆகிவிடுங்கள்

மன அழுத்தமாக இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் வீட்டிலேயே சின்ன மெக்கானிக்காக உருவெடுத்து விடுங்கள். நகம் வெட்டும் கருவி, கத்திரிக்கோல், ரேடியோ போன்ற சிறு சிறு உபகரணங்களை கழட்டி மாட்டுவது, அல்லது துடைத்து வைப்பது என ஏதுனும் புதிய வேலைகளில் உங்களை ஈடுபடுத்துங்கள் மன அழுத்தம் விரைவாக குறைந்துவிடும்.

கவிஞராக இல்லாவிட்டாலும் கூட..

கவிஞராக இல்லாவிட்டாலும் கூட..

கவிஞர்கள் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் தோன்றுவதை எழுதுங்கள். தினமும் டைரி எழுதுவது கூட மன அழுத்தம் குறைய உதவியாக இருக்கும். ஆக மொத்தம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதில் இருந்து வெளிவந்து வேறு வேலைகளில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம். சிறிது நேர மன ஓய்வு உங்களுக்கான சரியான வழியை காட்டும்.

இசைஞானியின் பாடல்கள்

இசைஞானியின் பாடல்கள்

உட்கார்ந்த இடத்திலேயே மன அழுத்தத்தை போக்க மற்றொரு சிறந்த வழி, பாடல்கள் கேட்பது. மனது இலகுவாக உணரும் படியான பாடல்கள் கேட்க வேண்டியது அவசியம். டப்பாங்குத்து பாடல்களை தயவு செய்து தவிர்க்கவும். முடிந்தால் 1980-களின் இசைஞானியின் பாடல்களிடம் உங்களது காதுகளை ஒருசில மணி நேரங்கள் ஒப்படைத்துவிட்டு அமர்ந்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.

மூச்சு பயிற்சி

மூச்சு பயிற்சி

மன அழுத்தத்தில் இருந்து வெளிவர மூச்சு பயிற்சி வெகுவாக உதவும். மூக்கின் ஒரு பக்க துவாரம் வழியாக மட்டும் 8 முறை இழுத்து மூச்சுவிட்டு, மறுபடியும் மறு துவார பக்கமாக திருப்பி செய்ய வேண்டும். இதுப் போல மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் கூட மன அழுத்தம் குறையுமாம்.

புகைப்படங்களும் நினைவுகளும்

புகைப்படங்களும் நினைவுகளும்

நீங்கள் கடந்து வந்த பாதையில் கண்டிப்பாக மறக்க முடியாத நினைவுகள் இருக்கும். உங்களது திருமண அல்பம், நண்பர்களோடு சுற்றுலா சென்று வந்த போது எடுத்த போட்டோக்கள் என நிறைய நினைவுகள் உங்களுக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும் அதை நினைவு கூர்ந்து பாருங்கள். முடிந்தால் அந்த புகைப்படங்களையும் எடுத்து பாருங்கள். மன அழுத்தம் குறைய இது உதவும்.

தியான நிலை

தியான நிலை

அனைத்தையும் மறந்து உங்கள் கண்களை மூடி அமைதியான இடத்தில் அமர்ந்திருங்கள். ஓம் என்று தான் கூறி தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த பெயர்கள், அது கடவுளாக இருக்கலாம், உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தை, காதலியாக கூட இருக்கலாம், அவர்களது பெயரை உச்சரித்து தியானம் செய்யுங்கள்.

சுற்றுலா

சுற்றுலா

நீங்கள் சென்று வந்த, உங்களுக்கு பிடித்தமான சுற்றுலா இடங்களுக்கு நீங்கள் தனியாக ஒரு முறை கற்பனையில் சென்று வாருங்கள். அன்றைய நினைவுகள், நீங்கள் பார்த்த இடங்கள், அவ்விடத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் இவை எல்லாம் உங்கள் மன அழுத்தத்தை போக்கிநிம்மதியான சூழலை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Ways To De-Stress Without Leaving Your Chair

Do you know about the eight ways to de-stress without leaving your chair? read here.
Story first published: Thursday, July 2, 2015, 13:33 [IST]
Desktop Bottom Promotion