கொஞ்சிக் குலாவுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள்!!

Subscribe to Boldsky

உடலுறவு என்பது ஆண், பெண் என்ற இரு உடல்கள் மட்டும் சேர்வதற்காக அல்ல. வம்ச விருத்தி என்பது ஒருப்பக்கம் இருப்பினும், மறுப்பக்கம் ஆண், பெண் இருவரின் உடல்நலம் சார்ந்த ஆரோக்கிய நன்மைகள் பலவும் இதனுள் புதையுண்டு கிடக்கிறது.

உங்கள் துணையுடன் நீங்கள் கட்டிலில் கொஞ்சி விளையாடுவதால், உடலுறவு மேம்படுவது மட்டுமின்றி, உங்கள் உடல் நலமும் மேம்படுகிறது. இரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் சோர்வு, புத்துணர்ச்சி, தன்னம்பிக்கை என எண்ணற்ற நலன்களை தருகிறதாம் கொஞ்சி விளையாடுதல் முறை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பலன் ஒன்று

நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். உடலில் தொற்றுகள் அதிகம் அன்றிடாது பார்த்துக் கொள்ள உதவுகிறது.

பலன் இரண்டு

வலியை குறைக்க உதவுகிறதாம். ஆம், கணவன், மனைவி, கட்டிலில் கொஞ்சி விளையாடுவது வலி நிவாரணியாக திகழ்கிறது என்று உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கொஞ்சி விளையாடும் போது வெளிப்படும் "Oxytoxin" தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பலன் மூன்று

மனநிலை மேலோங்குதல், கொஞ்சி விளையாடும் போது வெளிப்படும் "Oxytoxin"-னால் உடலில் உள்ள ஹார்மோன்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. இதனால், உங்கள் மனநிலை மேலோங்குகிறது.

பலன் நான்கு

உங்கள் துணையுடன் நீங்கள் கொஞ்சி விளையாடுவதால், அச்சம் தவிர்க்க முடிகிறதாம். மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் செய்கிறது.

பலன் ஐந்து

உங்கள் துணையுடன் நீங்கள் கொஞ்சி விளையாடும் போது, உங்கள் உடலில் இருந்து டோபமைன் வெளியாகிறது. இதனால் நீங்கள் இறுக்கமின்றி இலகுவாக உணர முடியும்.

பலன் ஆறு

கொஞ்சி விளையாடுவதால் இதய பாதிப்புகள் மிகவும் குறைவாக தான் ஏற்படுகிறதாம். சில ஆரோக்கிய நிபுணர்கள், அதிகம் கொஞ்சி விளையாடும் நபர்கள், இதய பாதிப்பில் இருந்து மிகவும் தள்ளி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

பலன் ஏழு

உங்கள் இருவர் மத்தியில் இருக்கும் உறவில் நெருக்கம் அதிகமாகும். இதன் காரணத்தினால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.

பலன் எட்டு

இரத்த அழுத்தம் குறைகிறது. ஆம், நீங்கள் உங்கள் துணையோடு கொஞ்சி விளையாடும் போது உங்களது இரத்த அழுத்தம் குறைந்து, சீராக இயங்க தொடங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Eight Health Benefits Of Cuddling

Do you know about the Eight health benefits of cuddling? read here.
Story first published: Wednesday, September 16, 2015, 11:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter