For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூட் கனால் எனப்படும் பற்கால்வாய் வலியா? இதோ அதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

சமீபத்தில் செய்துள்ள பற்கால்வாய் சிகிச்சைக்குப் பின் தீவிர வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அதற்கு சிறப்பான பயனை தரும் மருந்துகளை தேடியதில் வெற்றி கிடைக்கவில்லையா? அப்படியெனில் கவலை வேண்டாம்.

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!

உங்களுக்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளை பரிந்துரைக்க போகிறோம். அது பற்கால்வாய் சிகிச்சையினால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை போக்கும். என்ன, தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்!!!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் பேக்

ஐஸ் பேக்

இந்த சிகிச்சை முறை பல வருட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் சிறந்த சிகிச்சை முறையாக இருந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் பேக்கை வைத்திடவும். அப்படிச் செய்வதால் அந்த பகுதி உணர்ச்சியில்லாமல் போகும். அதனால் வலியும் குறையும். ஆனால் தொடர்ச்சியாக ஐஸ் பேக்கை 10 நிமிடத்திற்கு மேல் வைக்காதவாறு பார்த்துக் கொள்வோம்.

நீர்ம உணவு

நீர்ம உணவு

பல் வலி ஏற்படும் போது நீர்ம உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரஞ்சு ஜூஸ், கேரட் ஜூஸ் போன்ற ஜூஸ்கள் குடிப்பதை அதிகரிப்பதும் கூட நல்ல ஐடியா. இருப்பினும், நீங்கள் பருகும் ஜூஸ் அதிக குளிராக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது பற்களை கூசச் செய்யும்.

உப்பு

உப்பு

1 டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, வாயை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறையாவது கொப்பளிக்கவும். முடிந்தால், தண்ணீரை பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது நேரம் தக்க வைத்துக் கொண்டு, பின் துப்பி விடவும்.

மதுபானம்

மதுபானம்

விஸ்கி அல்லது பீர் போன்ற மதுபான வகைகளை கொண்டும் கூட வாயை கொப்பளிக்கலாம். இது மவுத்வாஷ் போலவே சிறந்த பயனை அளிக்கும். இது தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாவை நீக்குவதோடு மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட இடத்தில் உணர்ச்சியை நீக்கும். இதனால் வலியில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

டீ ட்ரீ எண்ணெய்

டீ ட்ரீ எண்ணெய்

பருக்கள் மற்றும் வடுக்கள் உட்பட பல விதமான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது டீ ட்ரீ எண்ணெய். இந்த எண்ணெய் பற்கால்வாயினால் ஏற்பட்டுள்ள வலியை போக்கவும் உதவும். சில துளி எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அதனை வாயில் சற்று நேரம் வைத்திருக்கவும். இது வலியை குறைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வலியை குறைக்கும் குணங்களை கொண்டுள்ள மற்றொரு வீட்டு சிகிச்சையாக விளங்குகிறது வெள்ளரிக்காய். நற்பதமான வெள்ளரிக்காயை ஒரு துண்டு எடுத்து, பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைக்கவும். வெள்ளரிக்காயின் குளிர்விக்கும் தன்மை வலிக்கு நிவாரணம் அளிக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஒரு பஞ்சுருண்டையின் மீது சற்று ஆலிவ் எண்ணெய் தடவி அதனை வலி எடுக்கும் பல்லின் மீது மெதுவாக தடவவும். நீங்கள் எதிர்கொள்ளும் வலி இதனால் மெதுவாக மறையத் தொடங்கும். ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உள்ளதால், வலி மற்றும் வீக்கத்திற்கு நிவாரணம் அளிக்கும்.

கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

கிராம்பில் அழற்சி எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் மயக்க குணங்கள் நிறைந்துள்ளது. வலி நிவாரணிக்கு பாதிக்கப்பட்ட பல்லின் மீது கிராம்பு எண்ணெய்யை தடவவும்.

எண்ணெய்/பூண்டு ஜூஸ்

எண்ணெய்/பூண்டு ஜூஸ்

பூண்டில் ஆன்டி-பயாடிக் மற்றும் இதர மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. வெங்காயமோ கிருமி நாசினியாக பயன்படுகிறது. வெங்காயம் அல்லது பூண்டை மெல்லுவது பற்கால்வாய் வலிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கிறது.

பெருங்காயம்

பெருங்காயம்

பற்கால்வாய் வலிக்கு அறியப்படும் மற்றொரு மிகச்சிறந்த நிவாரணம் தான் பெருங்காயம். சிறிது பெருங்காயத்தை 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸுடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை சற்று சுட வைத்து கொள்ளுங்கள். பின் பஞ்சுருண்டையை அதில் முக்கி அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, வலியை குறைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Home Remedies For Root Canal Pain

We have a few home remedies that help deal with the pain a root canal procedure brings.
Desktop Bottom Promotion