For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து 4 வாரம் 3 லிட்டர் தண்ணீரை குடித்து ஆச்சரியப்படும் வகையில் மாறிய அதிசய பெண்!

By Maha
|

அனைவருக்குமே தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரியும். மேலும் தண்ணீர் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது என்றும் தெரியும். ஆனால் எத்தனை பேர் இதைத் தெரிந்தும் தண்ணீரை அதிகம் குடித்துவருகிறார்கள்.

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!

நிச்சயம் குறைவாகவே இருப்பார்கள். ஏன் என்று கேட்டால் நேரம் இல்லை, ஞாபகம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது சாரா ஸ்மித் என்ற பெண்மணி ஒருவர் தொடர்ந்து நான்கு வாரங்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து, பலரும் ஆச்சரியப்படும் வகையில் மாறியுள்ளார்.

அல்சரால் கஷ்டப்படுறீங்களா? இதோ அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்!!!

இந்த செயலில் ஈடுபடும் முன், இவர் உடல் ஆரோக்கியம் மோசமாகவும், செரிமான பிரச்சனை, தலைவலி என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். மருத்துவரை அணுகிய போது, அவர் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் மருத்துவரும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வருமாறு பரிந்துரைத்தார்.

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

இதனால் சாரா ஒரு முடிவு எடுத்து 4 வாரங்கள் தொடர்ந்து 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து வர முடி செய்து பின்பற்றி வந்தார். இறுதியில் என்ன நடந்தது என்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாராவின் பிரச்சனை

சாராவின் பிரச்சனை

42 வயதான சாரா 52 வயதானவர் போன்று காணப்பட்டார். அதில் கருவளையங்கள், முகச் சுருக்கங்கள், முகத்தில் ஆங்காங்கு முதுமைப் புள்ளிகள், உதடுகள் பொலிவிழந்து, பார்ப்பதற்கே முதுமையானவர் போன்று காணப்பட்டார். அதுமட்டுமின்றி, உடலில் வேறு சில பிரச்சனைகளுடனும் இருந்தார். இதனால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான அவர், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார்.

சாராவின் பழக்கம்

சாராவின் பழக்கம்

சாரா அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் 1 லிட்டர் தண்ணீரையும், மதிய வேளையில் 1 லிட்டர் தண்ணீரையும் மற்றும் மாலையில் 1 லிட்டர் என தண்ணீரைக் குடித்து வந்தாராம்.

முதல் வாரம்

முதல் வாரம்

ஒரு வாரம் தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்ததில், அவரது குடலியக்கம் சீராக செயல்பட்டு, முன்பு லேசான மஞ்சள் நிறத்தில் துர்நாற்றத்துடன் வெளிவரும் சிறுநீர், தற்போது தெளிவாக துர்நாற்றமின்றி இருந்ததாம். தலைவலி குறைந்ததாம், மூட்டுகளின் இணைப்புக்கள் வலிமையடைந்து, மூட்டு பிரச்சனைகள் வருவது குறைந்திருந்ததாம்.

இரண்டாம் வாரம்

இரண்டாம் வாரம்

இரண்டாம் வாரம் தொடர்ந்து வந்த போது, சருமத்தின் நிறம் அதிகரித்ததோடு, கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்கள் முற்றிலும் நீங்காவிட்டாலும், கண்களைச் சுற்றியிருந்த கருவளையங்கள் நீங்கி, கண்கள் அழகாக காணப்பட ஆரம்பித்ததாம். மேலும் தொப்பை குறைந்ததும் நன்கு புலப்பட்டதாம்.

மூன்றாம் வாரம்

மூன்றாம் வாரம்

மூன்றாம் வாரத்தின் போது, கண்களில் உள்ள சுருக்கங்கள் மறைய ஆம்பித்து, கண்கள் ஆரோக்கியமாக இருந்ததாம். மேலும் அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவது குறைந்து, தாகம் அதிகரித்து, உடலில் தண்ணீரின் அளவு சீராக இருந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதை நன்கு உணர முடிந்ததாம்.

நான்காம் வாரம்

நான்காம் வாரம்

நான்காம் வாரத்தில் முன்பு உடலில் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகள் சுத்தமாக வராமல், முன்பிருந்த பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற முடிந்ததாம். அதிலும் அவரது சருமம் பட்டுப்போன்று மென்மையாக, நீர்ச்சத்துடனேயே இருந்ததாம்.

குறிப்பு

குறிப்பு

முக்கியமாக சாரா அவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதோடு, தனது மற்ற பழக்கவழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லையாம். அன்றாட பழக்கவழக்கங்களுடன், 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தாலே, உடல் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை நன்கு மேம்படுத்தலாம். மேலும் நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், இம்முறையை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்களும் ஆரோக்கியமாக மற்றும் அழகாக காணப்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drinks 3 Liters of Water Every Day for 4 Weeks and the Results are Really Shocking

Sufficient daily water intake is vital for virtually every function within our bodies and flushing all the accumulated toxins within the cells yet fewer than one in five of us drinks enough. Read on to see the results of this experiment.
Desktop Bottom Promotion