For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் பாலுடன் தேன் கலந்து குடித்தால் விந்தணுவின் உற்பத்தி அதிகமாகுமா?

By Maha
|

ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெறுவது தான் பால். ஏனெனில் பாலில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பல சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எப்படி பால் ஆரோக்கியமானதோ அதேப்போல் தான் தேனும். தேனிலும் நிறைய சத்துக்களும் அதனால் பல நன்மைகளும் கிடைக்கும். இந்த இரண்டு பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் சிறந்தவை.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பதால், பால் குடிக்கும் பலரும் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிப்பார்கள். இப்படி பாலில் தேன் கலந்து குடிப்பதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். அதிலும் ஆண்கள் இதனைக் குடித்து வந்தால் இன்னும் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

18-50 வயதிற்குட்ட ஆண்களுள் 10 சதவீதம் பேர் குறைவான விந்தணுக்களைக் கொண்டுள்ளனர் என்று சமீத்திய அறிக்கையில் வெளிவந்துள்ளது. இப்படி குறைவான விந்தணுக்களைக் கொண்டவர்கள், அதன் உற்பத்தியை அதிகரிக்க பாலை குடித்து வருவது நல்ல வழி என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிலும் பாலுடன் தேன் சேர்த்து குடிப்பது சிறந்த வழி என்றும் சொல்கின்றனர்.

ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவம்

ஆயுர்வேத மருத்துவத்தில் மலட்டுத்தன்மைக்கும், விந்தணு குறைபாட்டிற்கும் தேன் பரிந்துரைக்கப்படுகிறது. அதேப்போல் பாலும் விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. ஆகவே வெதுவெதுப்பான பாலில் தேன் சேர்த்து குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

ஆண் ஹார்மோன்களின் உற்பத்திக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானது. இத்தகைய வைட்டமின் ஏ பாலில் உள்ளது. மேலும் பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவற்றை குடித்து வந்தால், செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். முக்கியமாக பாலை குடித்து வந்தால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுக்கள் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பாலுணர்ச்சியைத் தூண்டும் தேன்

பாலுணர்ச்சியைத் தூண்டும் தேன்

நல்ல சுத்தமான தேன் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஏனெனில் அதில் ஜிங்க், வைட்டமின் ஈ போன்ற இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இதனை பாலுடன் சேர்த்து குடிக்கும் போது விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, பாலுணர்வும் தூண்டப்படும்.

 தேன் மற்றும் பூண்டு

தேன் மற்றும் பூண்டு

தேனை மற்றும் பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலின் எனர்ஜியை அதிகரிப்பதோடு, உறவில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

தேன் மற்றும் பட்டை

தேன் மற்றும் பட்டை

தேன் மற்றும் பட்டை பொடியை ஒன்றாக கலந்து சாப்பிடும் போது, ஆர்த்ரிடிஸ், முடி உதிர்தல், பல் வலி, உயர் கொலஸ்ட்ரால், இருமல், மலட்டுத்தன்மை, வயிற்று உப்புசம், எடை குறைவு, வலிமையிழந்த நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை குணமாகும்.

விந்தணு உற்பத்தியை குறைக்கும் செயல்கள்

விந்தணு உற்பத்தியை குறைக்கும் செயல்கள்

* மன அழுத்தம்

* தூக்கமின்மை

* புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

* உடல் பருமன்

* ஹார்மோன் பிரச்சனைகள்

* ஜிங்க் குறைபாடு

மேற்கூறியவைகள் தான் விந்தணு உற்பத்தியைக் குறைக்கும். ஆகவே இவற்றில் கவனமாக இருந்தால் விந்தணு உற்பத்தியில் எவ்வித பிரச்சனைகளும் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Drinking Milk With Honey Increase Sperm Count?

Does drinking milk with honey increase sperm count? Milk is a one of the best day to day herbal remedy that helps to increase sperm count naturally.
Desktop Bottom Promotion