For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் விஷத்தன்மை கொண்ட மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்!!!

|

நாம் பெரும்பாலும் இன்று ஷாப்பிங் மால்களுக்கு சென்று வாங்கினாலும் சரி, அண்ணாச்சி கடைகளில் வாங்கினாலும் சரி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ண காகிதங்களினால் அலங்கரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தான் விரும்பி வாங்கி பயன்படுத்துகிறோம். விளம்பரம் அதன் விளம்பர மாடல் மற்றும் அந்த பிராண்டின் பெயரை மட்டுமே கண்டு அதில் லயித்துப் போய்விடுகிறோம்.

நமக்கு தெரியாமலே, நம்மோடு தினமும் உறவாடும் விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள்!

அதில் மிக சிறியதாக அச்சடிக்கப்பட்டிருக்கும், அந்த உணவுப் பொருளில் கலப்பு செய்யப்பட்டுள்ள மூலப்பொருட்கள் பற்றி நாம் படிப்பதே இல்லை. கவனக்குறைவு, அக்கறையின்மை என்று தான் இதை கூற வேண்டும். கவர்ச்சியை கண்டு நாட்டையே கோட்டை விட்ட நமக்கு உடல் ஆரோக்கியம் என்ன அவ்வளவு பெரிதா என்ன? ஆனால், இந்த கவனமின்மை உங்கள் வருங்கால சந்ததியினரையும் பாதிக்கும்.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!!

வாயில் நுழையாத பெயர் என்று நாம் படிக்க மறந்துவிடும் அந்த இரசாயன கலப்புகள் சில பெட்ரோலியம் மற்றும் ரப்பர் தயாரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை அறியாமலேயே நாம் அதை பயன்படுத்தி வருகிறோம். இந்த விஷத்தன்மைக் கொண்ட மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நீங்கள் தவிர்க்க வேண்டியது கட்டாயம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புடிலேடெட் ஹைட்ராக்சிடோலூயென் (BHT-Butylated Hydroxytoluene)

புடிலேடெட் ஹைட்ராக்சிடோலூயென் (BHT-Butylated Hydroxytoluene)

பெட்ரோலியம் மற்றும் ரப்பர் தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்ற, இதே இரசாயனம் பெரும்பாலான உணவுப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களிலும் உணவை பதப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களது கல்லீரல் வெகுவாகப் பாதிப்படையும்.

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS -High Fructose Corn Syrup)

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS -High Fructose Corn Syrup)

இந்த உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் எனும் பொருள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், குளிர் பானங்களிலும் சேர்க்கப்படுகிறது. இதனால், உடல் பருமன், இதய பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ப்ரொபைலின் கிளைகோல் அல்ஜினேட் (Propylene glycol alginate)

ப்ரொபைலின் கிளைகோல் அல்ஜினேட் (Propylene glycol alginate)

உணவுப் பொருள் திடமாக இருக்கவும், பதப்படுத்தவும் பயன்ப்படுத்தப்படுகிறது இந்த இரசாயனம். ஆனால், இதே இரசாயனம் பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. விமான ஓடுபாதையிலும் இது உபயோகிக்கப்படுகிறது.

 மோனோ சோடியம் குளூட்டாமேட் (Monosodium Glutamate - MSG)

மோனோ சோடியம் குளூட்டாமேட் (Monosodium Glutamate - MSG)

சீன உணவுகளில் மற்றும் இன்ஸ்டன்ட் சூப், நூடுல்ஸ் உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படுகிறது இந்த மோனோ சோடியம் குளூட்டாமேட். மேலும் பதப்படுத்தப்படும் உணவிலும், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும்.

செயற்கை வண்ணங்கள் (Artificial Coloring)

செயற்கை வண்ணங்கள் (Artificial Coloring)

பெரும்பாலான குளிர் பானங்கள், பதப்படுத்தப்படும் உணவு பொருட்கள், தின்பண்டங்களில் சேர்க்கப்படும் இவை புற்றுநோய் பாதிப்பை அதிகப்படுத்தும்.

அக்சல்ஃப்ளேம் கே (Acesulfame-K)

அக்சல்ஃப்ளேம் கே (Acesulfame-K)

குளிர்பானங்களில் சுவைக்காக சேர்க்கப்படும் அக்சல்ஃப்ளேம் கே என்னும் இரசாயனம் அக்சல்ஃப்ளேம் பொட்டாசியம் என்றும் சொல்லப்படுகிறது. இவை தைராய்டு கட்டிகள் உருவாக காரணாமாக இருக்கின்றன.

புரோப்பில் கேலட்டை (Propyl Gallate)

புரோப்பில் கேலட்டை (Propyl Gallate)

மற்றுமொரு உணவுப் பொருளை பதபடுத்த உபயோகப்படுத்தப்படும் பொருள் தான் இது. அதிலும் அதிகமாக இறைச்சி மற்றும் சிக்கன் சூப் உணவுகளில் கலப்பு செய்யப்படுகிறது. மற்றும் சூயிங் கம்மிலும் சேர்க்கப்படுகிறது, இந்த இரசாயனம் அதிக அளவில் உடலில் சேர்ந்தால், புற்றுநோய் அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஹைட்ரோஜினேட்டட்/பிராக்ஸ்னேடட் எண்ணெய் (Hydrogenated/Fractionated Oils)

ஹைட்ரோஜினேட்டட்/பிராக்ஸ்னேடட் எண்ணெய் (Hydrogenated/Fractionated Oils)

இயற்கையிலேயே ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட எண்ணெய்கள் உடல்நலத்திற்கு நல்லது தான். ஆனால், செயற்கை முறையில் சூடேற்றப்பட்டு பின்பு குளுமைப்படுத்தி பிராக்ஸ்னேடட் செய்யப்படும் எண்ணெய்கள் விஷத்தன்மை கொண்டதாகும். நீங்கள் உபயோகப்படுத்தும் கர்னல், சோயா பீன்ஸ், சோள எண்ணெய், கனோலா எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous And Hidden Food Ingredients In Seemingly Healthy Foods

Do You Know The About Dangerous And Hidden Food Ingredients In Seemingly Healthy Foods? Read Here.
Desktop Bottom Promotion