For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!

|

இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஓர் மருத்துவர் இருக்கிறார்கள். அது பொதுவாக அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில் இருக்கிறார்கள். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்.

சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். இதனால் அந்த நேரத்தில் வலி குறைந்தாலும் கூட இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் சேதம்

கல்லீரல் சேதம்

வலி நிவாரணி மாத்திரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பெராக்சைடு கல்லீரல் சேதம் ஏற்படுகிறது. எட்டுக்கும் அதிகமான அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் கல்லீரலில் மிகுதியான சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் மதுவருந்துவோர் கட்டாயம் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ள கூடாது.

வயிறு வலி, அல்சர்

வயிறு வலி, அல்சர்

இப்யூபுரூஃபன், ஆஸ்பிரின் மற்றும் நேப்ரோஜென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளினால் ஏற்படும் எரிச்சலின் காரணமாக வயிறு வலி, அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

வலி நிவாரண மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் மன அழுத்தம் பாதிப்பு அதிகம் இருக்கிறது.

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

மேலும் அதிகமாக வலிநிவாரணி மாத்திரை உட்கொள்வதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது. வலி நிவாரணி மாத்திரையால் ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

கருச்சிதைவு

கருச்சிதைவு

கருவுற்ற முதல் இருபது வாரங்களில் வலிநிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ளவே கூடாது, இதனால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

வாயுத்தொல்லை

வாயுத்தொல்லை

உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு அடிக்கடி வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு வலிநிவாரணி மாத்திரையும் கூட ஓர் காரணமாக இருக்கிறது. மேலும் இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Effects Of Painkillers On Your Health

Dangerous Effects Of Painkillers On Your Health
Desktop Bottom Promotion