For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள் பற்றியும் அதன் உண்மை நிலை!!!

|

மன அழுத்தம், பல உடல்நல பிரச்சனைகளுக்கு இது காரணமாக அமைகிறது. ஆம், மன அழுத்தம் ஏற்படுவதால் உங்களது உடற்திறனில் அதிக குறைவு ஏற்படுகிறது. அனைவரும் சோகமாக இருப்பதை தான் மன அழுத்தம் என்று கருதுகிறார்கள். உண்மையில் மன அழுத்தத்திற்கும் சோகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கான எளிய வழிகள்!!!

சிலர் அதிகமாக கோவமடைவதால் கூட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மாத்திரை மருந்து கொண்டு குணமடைய வைக்கவோ, தீர்வுக் காணவோ மன அழுத்தம் என்பது நோயோ, குறைபாடோ அல்ல. உங்களது மனநிலை தான் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தி தான் இதற்கு தீர்வுக் காண வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1

கட்டுக்கதை 1

பொதுவாக மன அழுத்தம் ஏற்படுவது அரிதானது என்று கருதுகிறார்கள். ஆனால், மன அழுத்தம் என்பது பெண்களில் நான்கில் ஒருவருக்கும், ஆண்களில் ஆறில் ஒருவருக்கும் சாதாரணமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், வேலை, உறவுகள் போன்ற காரணங்களினால் மன அழுத்தம் அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது பொதுவானது.

கட்டுக்கதை 2

கட்டுக்கதை 2

"மன அழுத்தம் சோகமாக இருக்கும் போது தான் ஏற்படும்."

நிறைய பேர் சோகமாக இருப்பது தான் மன அழுத்தம் என்று கருதுகிறார்கள். உண்மையில் மன அழுத்தம் என்பது ஓர் மாயை போன்றது. இது கோவமாக இருக்கும் போது ஏற்படலாம். மன அழுத்தம் என்பது உங்களது நிகழ கால உணர்விலிருந்து பிரித்து வேறு சிந்தனைக்கு எடுத்து செல்வது. மன அழுத்தம் சோகம் என்பதை தாண்டிய ஒன்று.

கட்டுக்கதை 3

கட்டுக்கதை 3

"சுய பலவீனம்,"

மன அழுத்தம் ஏற்பட சுய பலவீனம் தான் காரணம் என்றும் சிலர் கருதுகிறார்கள். மன அழுத்தம் என்பது ஒருவரது குணாதிசயங்களை பொருத்து ஏற்படுவது அல்ல. ஒருவரது பலவீனத்திற்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை.

கட்டுக்கதை 4

கட்டுக்கதை 4

"மன அழுத்தம் ஒருவரை மட்டுமே பாதிக்கும்."

இது தவறு, ஒருவரது மன அழுத்தம் என்பது அவரை மட்டுமின்றி, அவரது வேலை பாடுகள், உறவு, குழந்தை வளர்ப்பு என அவரை சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கிறது. பெரும்பாலும் பொருளாதாரம் மன அழுத்தம் ஏற்பட ஓர் காரணியாக இருக்கிறது.

கட்டுக்கதை 5

கட்டுக்கதை 5

"மன அழுத்தம் அதுவாக சரியாகிவிடும்."

சிகிச்சை இன்றி மன அழுத்தம் சரியாகிவிடும் என்பது பொய். உண்மையில் இது எதிர்வினை எண்ணங்களை அதிகரிக்கும், தற்கொலை முயற்சிக்கு தூண்டும். இதில் இருந்து விடுபட நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் 20% பேர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்களாம்.

கட்டுக்கதை 6

கட்டுக்கதை 6

மன அழுத்தத்தில் இருந்து விடுபட தியானம் மட்டுமே சிறந்தது என்று கருதுவது பொய். தினமும் உடற்பயிற்சி செய்தல், மக்களோடு கலந்து பழகுதல் போன்றவை தான் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சிறந்த வகையில் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Myths About Depression Debunked

Here we have discussed about the common myths about depression debunked in tamil. Take a look.
Desktop Bottom Promotion