For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக வெஜிடேரியனாக மாறிய பிரபலங்கள்!!

|

வெஜிடேரியனாக இருப்பதில் என்ன நிறை இருக்கிறது என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கு தெரியுமா, நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், உடலில் கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு, உயர் அழுத்தம் போன்றவை குறையும். மற்றும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

தமிழ் பிரபலங்களும்... அவர்களின் பிட்னஸ் மந்திரங்களும்....

உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க வெஜ் டயட் உதவுகிறது. மேலும் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் இருக்க வெஜ் டயட் பயனளிக்கிறது. இதுப் போல நிறைய பயன்களை தருகிறது வெஜ்., உணவுகள். சிவப்பு இறைச்சி உணவுகள் உங்கள் இதயத்திற்கு மிகவும் தீங்கானது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ஆசியாவிலேயே இவர்கள் தான் அழகான பெண்களாம் : 2015-ம் ஆண்டின் பட்டியல்!!!

இனி தங்கள் உடல்நலனை பேணிக்காக்க வெஜிடேரியனாக மாறிய பாலிவுட் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

தாம் தூம் நாயகி கங்கனா ரனாவத் வெஜிடேரியனாக மாறிய பிறகு தன்னுள் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்.

டிப்ஸ்: நாட்பட்ட நோய்களை குறைக்க உதவுகிறது வெஜ் டயட்.

சாஹித் கபூர்

சாஹித் கபூர்

தந்தை அன்பளிப்பாக தந்த "லைப் இஸ் ஃபேர்" என்ற புத்தகத்தை படித்த பிறகு வெஜிடேரியனாக மாறிய ஹிந்தி நடிகர் சாஹித் கபூர். இப்போது தனது நண்பர்களையும் வெஜிடேரியனாக மாறும்படி அறிவுறுத்தி வருகிறார். இதற்கு காரணம் இவருக்குள் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் தான் என்று கூறப்படுகிறது.

டிப்ஸ்: நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது வெஜ் டயட்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

சாஹித் கபூருடன் உறவில் இருந்த போது தான் கரீனாவும் வெஜிடேரியனாக மாறினாராம். அதை இப்போதும் கடைப்பிடித்து வருகிறார் கரீனா. உடல் ரீதியாக இது புத்துணர்ச்சியாக உணர வைக்கிறதாம்.

டிப்ஸ்: உடல் எடையை கட்டுபடுத்த உதவுகிறது.

ஆமிர்கான்

ஆமிர்கான்

இவரது மனைவி கிரண் ராவ் காண்பித்த ஓர் காணொளியை கண்டு, தான் விரும்பி உண்ணும் மீன், சிக்கன், முட்டை என அனைத்தையும் விட்டுவிட்டு, வெஜிடேரியனாக மாறிவிட்டாராம் ஆமிர்கான். மற்றும் இது இவரது உடல்நிலையை நன்கு உணர செய்ததாம். இவரது மனைவி காண்பித்த காணொளியில் 15 விதமான நோய்கள் "நான் வெஜ்" சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பது தான் இதற்கு காரணமாம்.

டிப்ஸ்: இதய பாதிப்புகள் வாய்ப்பு குறைகிறது.

வித்யா பாலன்

வித்யா பாலன்

ஆரம்பத்திலிருந்தே வித்யா பாலன் வெஜிடேரியன் தான். இவரது உடல்நலநிற்காக நிபுணரின் கட்டாயத்தின் பேரில் இடையில் முட்டை சாப்பிட்டு வந்தாராம். ஆனாலும், உடனே மீண்டும் முழு வெஜிடேரியனாக மாறிவிட்டார் வித்யா.

டிப்ஸ்: புற்றுநோய் கட்டி உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

"பீட்டா" இவரை மூன்று முரை ஹாட்டஸ்ட் வெஜ் பிரபலம் என்று தேர்வு செய்துள்ளது. கடந்து சில பல வருடங்களாக தான் அமிதாப்பச்சன் வெஜிடேரியனாக இருந்து வருகிறார்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சனை ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது.

ரேகா

ரேகா

இந்தியாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த ரேகா, ஆரம்பத்தில் இருந்தே வெஜிடேரியன்.

டிப்ஸ்: வெஜ் டயட்டில் இருப்பவர்களுக்கு கண்புரை பிரச்சனை குறைவாக தான் ஏற்படுகிறது.

வித்யூத் ஜமால்

வித்யூத் ஜமால்

துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜமால் காட்டுத்தனமான உடல்கட்டை வைத்திருந்தாலும் இவர் ஓர் வெஜிடேரியன். ஏறத்தாழ 14 வருடங்களாக இவர் வெஜிடேரியனாக திகழ்ந்து வருகிறார்.

டிப்ஸ்: சிறுநீரக நலனை ஊக்குவிக்கிறது.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகையான மல்லிகா, ஜாக்கிக்கே ஜாக்கியாக இருந்தவர். இவர் முழுமையான வெஜிடேரியன் மற்றும் தனக்கு வரப்போகும் கணவரும் கூட வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

டிப்ஸ்; வாழ்நாளை அதிகரிக்கிறதாம் வெஜ் டயட்.

ஆலியா பட்

ஆலியா பட்

வெஜிடேரியனாக மாறிய பாலிவுட் நட்சத்திர அணியில் சமீபத்தில் சேர்ந்தவர் ஆலியா பட். கடந்த சில வருடங்களாக இவர் வெஜிடேரியனாக இருந்து வருகிறார்.

டிப்ஸ்: கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் உடலை பாதுகாக்க உதவுகிறது வெஜ் டயட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebs Who Turned Vegan For A Healthy Life

Here we have discussed about the celebs who turned vegan for a healthy life, in tamil. take a look.
Desktop Bottom Promotion