பாக்கெட் பாலை குடிக்கிறதுக்கு.. இத சாப்பிட்டாலே கால்சியம் கிடைக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் பால் மிகவும் முக்கியமானது. ஏனெனில் பாலில் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் இப்போது வரும் பாக்கெட் பாலில் ஒன்றுமே இல்லை. அதனை குடிப்பதற்கு பதிலாக தண்ணீரை குடித்துவிட்டு போகலாம்.

மேலும் சிலருக்கு பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் அழற்சியை ஏற்படுத்தும். அத்தகையவர்களுக்கு தேவையான கால்சியம் சத்தானது ஒருசில உணவுப் பொருட்களில் வளமாக நிறைந்துள்ளது. அவற்றை உட்கொண்டு வந்தாலே, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைக்கும்.

சரி, இப்போது அந்த கால்சியம் அதிகம் நிறைந்த பாலுக்கு சிறந்தே மாற்றாக விளங்கும் உணவுப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

மீன்களில் மத்தி மீனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக உள்ளது. சால்மன் மீனிலும் கால்சியம் வளமாக உள்ளது. மேலும் சால்மன் மீனை அப்படியே முள்ளோடு சாப்பிட வேண்டும்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு

உங்களுக்கு பால் குடிக்க பிடிக்காவிட்டாலும், தினமும் சிறிது பாதாம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைக்கும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காயை சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அத்தகைய வெண்டைக்காயில் கால்சியம் தவிர வேறு சில சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

சீரகம்

சீரகம்

சீரகம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என்று தெரியும். ஆனால் அதில் கால்சியம் உள்ளது என்பது தெரியுமா? ஆம், உண்மையிலேயே சீரகம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவி புரியும்.

எள்

எள்

1 டேபிள் ஸ்பூன் எள்ளில் 50 மி.கி கால்சியம் உள்ளது மேலும் இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரசச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் கால்சியம் சிட்ரேட் அதிகம் உள்ளது. அதிலும் 1/2 கப் ஆரஞ்சு ஜூஸில் 175 மிகி கால்சியம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Calcium Rich Foods For Lactose Intolerant

Here are some of the calcium rich foods for lactose intolerant. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter