உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்!!!

By:
Subscribe to Boldsky

உட்கார்ந்து கொண்டே பல மணிநேரம் வேலை செய்வதால், உண்ட உணவுகள் செரிமானமாகாமல், அவை உடலில் கொழுப்புக்களாக ஆங்காங்கு படிந்து, தொப்பை, உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் சிலர் உணவு சுவையாக உள்ளது என்று நன்கு மூக்கு பிடிக்க சாப்பிடுவார்கள். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு உடல் உழைப்பு இருந்தால் தான், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும். இல்லாவிட்டால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படக்கூடும்.

ஆகவே உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கவும், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் ஒருசிலவற்றை பின்பற்றினால் நிச்சயம், உடலை ஸ்லிம்மாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம். இங்கு உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நல்ல கொழுப்புக்களை சாப்பிடவும்

நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தினமும் 2-3 வேளையில் மோனோ அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை நிறைந்த நட்ஸ், எண்ணெய்கள், மீன், அவகேடோ மற்றும் சாக்லேட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்கவும்

உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே தினமும் மூன்று வேளை புரோட்டீன் நிறைந்த சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். அதற்கு தினமும் பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொண்டு வர வேண்டும்.

வைட்டமின் டி அவசியம்

வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், எலும்புகள் வலிமையடைவதோடு, உடல் எடை குறைவதும் அதிகமாகும். இத்தகைய சத்துக்கள் பால் பொருட்களில் அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி

ஆய்வுகள் பலவற்றிலும் கொழுப்புக்களை கரைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கிமானது என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வது தான் மிகவும் நல்லது. முக்கியமான தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்து வர வேண்டும்.

டீ குடிக்கவும்

க்ரீன் அல்லது ப்ளாக் டீ குடிப்பதன் மூலம், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். அதிலும் க்ரீன் டீயில் EGCG என்னும் உடலில் உள்ள கலோரிகளை கரைக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே தவறாமல் க்ரீன் அல்லது ப்ளாக் டீ குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Burn Fat Faster By Following These 6 Simple Rules

Here are 6 rules you can follow to burn those excess fat fast.
Story first published: Tuesday, March 10, 2015, 16:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter