For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

By Maha
|

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், மற்றவைகள் எல்லாம் தானாக வந்து சேரும். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை முறையில், மக்கள் தங்களை மறந்து, ரோபோ போன்று வேலைகளை செய்து, சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல், ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரோக்கியம் என்று நினைக்கும் சில ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள்!!!

ஆரோக்கியத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது. மனதில் பிரச்சனை இருந்தால், அது அப்படியே உடலை சோர்வடையச் செய்து, வலிமை இல்லாதவராக்கிவிடும். அதுவே உடலில் பிரச்சனை இருந்தால், அது மனதினுள் இடையூறை ஏற்படுத்தும்.

நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

எனவே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, முதலில் நாம் ஆரோக்கியமாக உள்ளோமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பலர் தாங்கள் ஆரோக்கியம் என்று நினைத்து, சிறு உடல்நல பிரச்சனையை கூட சாதாரணமாக எண்ணி விடுகின்றனர். இருப்பினும் அந்த சிறு பிரச்சனை இருந்தால் கூட அது நீங்கள் ஆரோக்கியமற்றவர் என்றே அர்த்தம்.

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

சரி, இப்போது நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாள்பட்ட மலச்சிக்கல்

நாள்பட்ட மலச்சிக்கல்

மலத்தின் மூலம் தான் உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகிறது. ஆனால் அந்த மலம் சரியாக வெளியேற்றப்படாமல் இருந்தால், அதுவே பல்வேறு தீவிரமான பிரச்சனைகளுக்கு உள்ளாக்கிவிடும். உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைக் கண்டறியுங்கள். ஏனெனில் மலச்சிக்கலானது பல்வேறு தீவிர உடல்நல பிரச்சனைகளுக்கு அறிகுறியாகும்.

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பு

உதடுகளில் மற்றும் அதன் ஓரங்களில் வெடிப்புகள் ஏற்பட்டால், உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு உ ள்ளது என்று அர்த்தம். மேலும் இந்த குறைபாடு இரத்த சோகைக்கான அறிகுறியும் கூட. அதுமட்டுமின்றி அடிக்கடி உதடுகள் வறட்சியடைந்தால், உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்று அர்த்தம். எனவே உதடு வெடிப்பை சாதாரணமாக எண்ணாமல், கவனமாக இருங்கள்.

அடிக்கடி சளி

அடிக்கடி சளி

உங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம், சளி போன்றவை பிடித்தால், அதனை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது அல்லது வைட்டமின் சி குறைபாடு உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. அதுமட்டுமின்றி, சளி வைரஸ் தாக்குதல் ஓர் அறிகுறி. எனவே தவறாமல் மருத்துவரை சந்தித்து, போதிய பரிசோதனையை மேற்கொண்டு, சிகிச்சையைப் பெறுங்கள்.

அடர் மஞ்சள் நிற சிறுநீர்

அடர் மஞ்சள் நிற சிறுநீர்

சிறுநீரின் நிறத்தைக் கொண்டே உடல்நலத்தை அறியலாம். நீங்கள் தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்தால், சிறுநீர் சுத்தமாக வெளியேறும். ஆனால் தண்ணீர் நன்கு குடித்தும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், உங்கள் உடலில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். அதிலும் சிறுநீரகத்தில் ஏதோ பிரச்சனை இருக்கலாம்.

குறிப்பு: நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்து வருபவராயின், சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். எனவே மருத்து மாத்திரைகளை எடுத்து வந்தால், இப்பிரச்சனை கண்டு பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை.

தூக்க பிரச்சனை

தூக்க பிரச்சனை

உங்களால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவித்தால், நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் மன அழுத்தமானது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி, தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் அளவு குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் போகலாம். எனவே இந்நேரத்தில் மருத்துவரை சந்தித்து முறையான ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சருமத்தில் அரிப்பு

சருமத்தில் அரிப்பு

சருமத்தில் சிலருக்கு அலர்ஜியால் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும். ஆனால் சரும அரிப்பு நாள் கணக்கில் தொடர்ந்தால், அது கல்லீரல் நோய்க்கான அறிகுறியாகும். எனவே இந்த நேரத்தில் மருத்துவரை சந்தியுங்கள்.

எப்போதும் சோர்வு

எப்போதும் சோர்வு

நீங்கள் ஆரோக்கியமற்றவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று, எப்போதும் சோர்வை உணர்வது. இப்பிரச்சனையானது காரணமின்றி வராது. உங்கள் தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தாலோ, உங்கள் உடலில் கழிவுகள் அதிகம் சேர்ந்தாலோ மற்றும் உங்கள் கல்லீரல் அந்த கழிவுகளை வெளியேற்ற அதிக ஆற்றலை செலவழித்தாலோ, இந்த சோர்வு ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

குறட்டை

குறட்டை

கவனித்துப் பாருங்கள், உங்கள் டீனேஜ் பருவத்தில் வராத குறட்டை, திடீரென்று வந்திருக்கும். அப்படியெனில் என்ன அர்த்தம், உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இல்லை என்று தானே! ஆம், ஏனென்றால் வயதாகும் போது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், மன இறுக்கம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் அதிகமாக குறட்டை விடுபவராயின், மருத்துவரை சந்தித்து காரணத்தைக் கண்டறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Signs Of Being Unhealthy

There are many signs that show you are unhealthy. Know these symptoms of unhealthy liver and dark yellow urine. Here are some body symptoms that show you are unhealthy.
Desktop Bottom Promotion