நீங்கள் பயன்படுத்தும் இந்த மருந்துகளின் விசித்திர பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மக்களாகிய நம்முள் பல திறமைகள் இருப்பது போல, நாம் பயன்படுத்தும் மருந்துகளுக்கும் கூட பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. ஆம், நாம் பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சளிக்கு பயன்படுத்தும் விக்ஸ் வேப்பரப், இருமல் மருந்து பெனட்ரில் என சில மருந்துகள் சில விசித்திர பயன்களும் அளிக்கிறது.

உங்க இரத்தம் சுத்தமா இருந்தா தான் உடம்பு சுத்தமா இருக்கும், அதுக்கு என்ன பண்ணலாம்?

ஆனால், இது அனைவருக்கும் பயன் தருமா என்றால்? இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் "அந்த கடவுளால கூட எல்லாருக்கும் நல்லது பண்ண முடியாது இல்லையா...". அதாவது, நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல், சரும கூறுகள் இல்லை. இதில் வேறுபடுபவர்களுக்கு இது எரிச்சல், எதிர்மறை விளைவுகளை கூட வெளிப்படுத்தலாம்.

ஃபிரிட்ஜில் எந்தெந்த உணவுகளை எவ்வளவு நாட்கள் வைக்க வேண்டும்?

இதுக் குறித்த எச்சரிக்கைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

 • உண்மையான பயன்:

  ஆஸ்பிரின்

  உண்மையான பயன்:

  ஆஸ்பிரின் மருந்து காய்ச்சல், வலி நிவாரணம், சளி, தலைவலி போன்றவற்றுக்கு தான் பொதுவாக பயனைளிக்கும் என மக்கள் பயன்படுத்துவது வழக்கம்.

 • விசித்திர பயன்:

  ஆஸ்பிரின்

  விசித்திர பயன்:

  ஆனால், இது பூச்சிக்கடி, பொடுகு, போன்றவற்றுக்கும் நல்ல பயனளிக்கிறது. கொசுக்கடிக்கு ஆஸ்பிரின் மாத்திரையை பொடியாக்கி நீரில் கலந்து தடவ வேண்டும் என கூறுகிறார்கள். இதில் இருக்கும் ஆன்டி-அலர்ஜி மூலப்பொருள் (acetylsalicylic acid) இதற்கு சிறந்த தீர்வளிக்கிறது. அதே போல தான் இதை ஷாம்பூவில் கலந்து தலையில் தேய்த்து சில நிமிடம் கழித்து கழுவினால் பொடுகுத் தொல்லை நீங்குமாம்.

 • எச்சரிக்கை:

  ஆஸ்பிரின்

  எச்சரிக்கை:

  இதிலிருக்கும் 'Salicylic acid ' சரும எரிச்சல் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு ஏற்பட்டால் உடனே கழுவிவிடவும்.

 • உண்மையான பயன்:

  பெனட்ரில்

  உண்மையான பயன்:

  இருமல் மற்றும் சளிக்கு சிறந்த நிவராணம் அளிக்கும் திரவ மருந்து தான் பெனட்ரில்.

 • விசித்திர பயன்:

  பெனட்ரில்

  விசித்திர பயன்:

  ஆனால், இது அசௌகரியத்தை போக்கி நல்ல உறக்கம் தர சிறந்த வகையில் பயனளிக்கிறது. பெனட்ரிலில் இருக்கும் மூலப்பொருட்களான 'diphenhydramine' ஒரு ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்தாகும். எனவே இது உடலில் இருக்கும் ஒவ்வாமைகளை சரி செய்து நல்ல உறக்கம் வர உதவுகிறது. குமட்டலை கட்டுப்படுத்தவும் இது பயனளிக்கிறது.

 • எச்சரிக்கை:

  பெனட்ரில்

  எச்சரிக்கை:

  இது தூக்கமின்மை கோளாறுக்கு தகுந்த மருந்தல்ல. இதில் ஹென்கோவர் விளைவிக்கும் தன்மை இருப்பதால் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்த வேண்டாம்.

 • உண்மையான பயன்:

  லிஸ்டரின் (Listerine)

  உண்மையான பயன்:

  லிஸ்டரின் ஓர் கிருமி நாசினி மருந்தாகும். இது வாயில் இருக்கும் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்களை அளிக்க பயனளிக்கிறது. வாய் துர்நாற்றம், ஈறு போன்ற வாய் சார்ந்த பிரச்சனைக்கு இது தீர்வளிக்கும்.

 • விசித்திர பயன்:

  லிஸ்டரின் (Listerine)

  விசித்திர பயன்:

  பேன்களை அழிக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து தீர்வுக் காணவும் கூட இது கூடுதல் பயனளிக்கிறது. இதில் இருக்கும் மூலப்பொருள் பேன்களை கொல்கிறது. தலையில் லிஸ்டரினை ஊறவைத்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் இந்த தொல்லைகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

 • எச்சரிக்கை:

  லிஸ்டரின் (Listerine)

  எச்சரிக்கை:

  புண், தடித்தல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம். லிஸ்டரினில் இருக்கும் ஆல்கஹால் பங்கு எரிச்சலை உண்டாக்கலாம்.

 • உண்மையான பயன்:

  டூத்பேஸ்ட்

  உண்மையான பயன்:

  பல் துலக்க மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க தான் டூத்பேஸ்ட் பொதுவான பயனளிக்கிறது.

 • விசித்திரமான பயன்:

  டூத்பேஸ்ட்

  விசித்திரமான பயன்:

  முகப்பரு போக்க, கறைகள், லேசான தீக்காயங்கள், செல்போனே திரையை பளிச்சிட வைக்க, லிப்ஸ்டிக் கறையைப் போக்க என பல வழிகளில் பயனளிக்கிறது டூத்பேஸ்ட். பற்களை வெண்மையாக்க இதில் சேர்க்கப்படும் மூலப்பொருள் தான் இதற்கெல்லாம் பயனளிக்கிறது.

 • எச்சரிக்கை:

  டூத்பேஸ்ட்

  எச்சரிக்கை:

  சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது எரிச்சலை உண்டாக்கலாம். எனவே, அவர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறார்கள்.

 • உண்மையான பயன்:

  விக்ஸ் வேப்பரப்

  உண்மையான பயன்:

  சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிப்பது தான் விக்ஸ் வேப்பரபின் உண்மையான பயனாகும்.

 • விசித்திர பயன்:

  விக்ஸ் வேப்பரப்

  விசித்திர பயன்:

  இது தலைவலி, நகத்தில் வரும் பூஞ்சை, சிறு, சிறு வெட்டுக் காயங்கள் போன்றவற்றுக்கும் பயனளிக்கிறதாம். இதிலிருக்கும் பச்சை கற்பூரம் (Menthol) தலைவலியை போக்கும் குணம் கொண்டதாகும். மற்றும் இதிலிருக்கும் 'Thymol', 'camphor', 'eucalyptus oil' மூலப்பொருட்கள் போன்றவை ஆன்டி- ஃபங்கஸ் பொருள்களாக திகழ்கின்றன. இவை, தொற்று மற்றும் காயங்களில் இருந்து சீக்கிரம் தீர்வுக் காண உதவுகின்றன.

 • எச்சரிக்கை:

  விக்ஸ் வேப்பரப்

  எச்சரிக்கை:

  ஒருவேளை நீங்கள் கெமிக்கல் காரணமாக எரிச்சல் ஏற்படுவது போல உணர்தால் உடனே இதை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Read In English

Do you know about the bizarre uses of your regular medicines? read here in tamil.
Please Wait while comments are loading...