For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகு வலி, இடுப்பு வலி இன்றி, இனி நிம்மதியாக வேலை செய்யலாம்!!!

By John
|

ஐ.டி., தொழிநுட்ப துறையில் பணிபுரியும் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனை என்றால் அது, இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி தான். மணிக்கணக்கில் அவர்கள் உட்கார்ந்தே வேலை செய்வது தான் இதற்கு காரணமாய் இருக்கின்றது.

இதற்கு தீர்வளிக்கும் வகையில் தான் மென்பொருள் மேம்பாட்டாளரான வேயின் ஈகர் (Wayne Yeager) என்பவர் புதியதாய் ஓர் மேசையை வடிவமைத்துள்ளார். இதில், லேப்டாப்களையும் எளிதாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மேசையை பயன்படுத்துவதனால் இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி போன்றவை ஏற்படாமல் தவிர்க்கவும் முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நல குறைபாடு

உடல்நல குறைபாடு

ஆராய்ச்சியாளர்கள், புகைப்பிடிப்பது எவ்வளவு தீங்கானதோ, அதே அளவு உட்கார்ந்தே வேலை செய்வதும் தீங்கானது என்று கூறுகிறார்கள். இது, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்பட இரட்டிப்பு மடங்கு காரணமாக இருக்கிறது.

நின்று வேலை செய்வதும் கடினம்

நின்று வேலை செய்வதும் கடினம்

அதே வேளையில், தொடர்ந்து நின்றுக் கொண்டே வேலை செய்வதும் கடினம். இது, அசதியையும், கவனச்சிதறலையும் அதிகப்படுத்தும்.

புதியக் கண்டுப்பிடிப்பு

புதியக் கண்டுப்பிடிப்பு

இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில், இரண்டிற்கும் பொதுவாய், சாய்ந்த நிலையில், எளிமையாக, வலியின்றி சாய்ந்தவாறு நின்றுக் கொண்டே வேலை செய்ய ஓர் புதிய மேசை உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேயின் ஈகர் (Wayne Yeager)

வேயின் ஈகர் (Wayne Yeager)

கென்டக்கி சார்ந்த மென்பொருள் மேம்பாட்டாளரான வேயின் ஈகர் என்பவர், முதலில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதனால் ஏற்படும் பாதிப்புகளை படித்துள்ளார். பின்பு, இதற்கு ஏதாவது தீர்வுக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணிய அவர், இந்த புதிய மேசையை உருவாக்கியுள்ளார்.

25% எடை அழுத்தத்தை குறைக்கும்

25% எடை அழுத்தத்தை குறைக்கும்

நாம் சாதரணமாக நிற்கும் போது ஏற்படும் எடை அழுத்தத்தில் இருந்து, 25% குறைவான அழுத்தத்தை தான் வெளிப்படுத்துகிறது.

இனி, முதுகு வலி இல்லை

இனி, முதுகு வலி இல்லை

மற்றும் சாய்ந்தவாறு இருக்கும் இதன் அமைப்பு முதுகு வலியும், இடுப்பு வலியும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

லியன் மேசை (LeanChair)

லியன் மேசை (LeanChair)

லியன் மேசை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மேசையின் விலை $255. நலனை போலவே இதன் விளையும் கொஞ்சம் அதிகம் தான். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 16,253 ரூபாய் (இன்றைய மதிப்பில்)

 பயன்கள்

பயன்கள்

இந்த மேசையை பயன்படுத்துவதனால், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை ஏற்படாது என்று இதைக் கண்டுப்பிடித்துள்ள வேயின் ஈகர் கூறியுள்ளார். மற்றும் மற்ற மேசைகளை போலவே இதிலும் லேப்டாப் போன்ற உபகரணங்களை பயன்படுத்த முடியும், நோட்டு புத்தகங்களை வைத்து எழுத முடியும். எழுதுவதற்கு ஏதுவாக இருக்க ஓர் இணைப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு நிதி

கூட்டு நிதி

க்ரவுட் ஃபன்டிங் (Crowd Funding) எனப்படும் பலர் சேர்ந்து முதலீடு செய்யும் வகையில் இந்த புதிய மேசையை தயாரித்து விற்க முன்வந்துள்ளனர்.

அமெரிக்காவில் விற்பனை

அமெரிக்காவில் விற்பனை

முதல் கட்டமாக இந்த லியன் மேசை எனும் புதிய மேசையை அமெரிக்காவில் விற்க, இவர்கள் முன்வந்துள்ளனர். மக்கள் மத்தியில் இது வரவேற்புப் பெற்றால், உலக சந்தையில் விற்பதை பற்றி யோசிக்கப்பவும் என்றும் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Cross Between A Standing Desk And Padded Chair

The LeanChair is the invention of Kentucky-based software developer, Wayne Yeager. He claims it takes around 25 per cent of the weight off the user's legs
Desktop Bottom Promotion