For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாடம் தானியங்களை சாப்பிடுவதற்கான சில அற்புத வழிகள்!!!

By Maha
|

நம் முன்னோர்கள் எல்லாம் தானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை தான் அன்றாடம் அதிக அளவில் எடுத்து வந்தார்கள். இதனால் அவர்களின் உடல் வலிமையாகவும், நோய்களின்றி ஆரோக்கியமாகவும் இருந்தது. மேலும் அக்காலத்தில் எந்த ஒரு உணவுப் பொருளும் சுத்திகரிக்கப்படாத நிலையில் கிடைத்ததால், அளவாக உட்கொண்டாலும் அதனால் எண்ணற்ற நன்மைகள் கிடைத்தது.

காலை வேளையில் தானியங்களை உணவாக எடுத்து வருவதன் முக்கியத்துவம்!!!

ஆனால் தற்போது வரும் தானியங்கள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்டு வருவதால், அதில் உள்ள சத்துக்கள் முற்றிலும் வெளியேறியே கிடைக்கிறது. அதற்காக அதில் ஒட்டியிருக்கும் கொஞ்சநஞ்ச சத்துக்களையும் பெறாமல் விட்டால், கஷ்டமாகிவிடும்.

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

முக்கியமாக தானியங்களில் நார்ச்சத்துக்கள் வளமையாக நிறைந்துள்ளது. இத்தகைய தானியங்களை நாம் பலவாறு உணவில் சேர்க்கலாம். மேலும் நமக்கு தானியங்களும் பலவாறு கிடைக்கின்றன. உதாரணமாக, பாப்கார்ன், ஓட்ஸ், முழு தானிய பிரட் என்று தானியங்கள் பலவாறு கிடைக்கிறது.

ஆரோக்கியமான தமிழ்நாட்டு காலை உணவுகளும்... அதன் நன்மைகளும்...

இவற்றை உட்கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும், எடை குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மலச்சிக்கல் நீங்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதும் கூட. எனவே கண்ட உணவுகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாமல், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களான தானியங்களை உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாப்கார்ன்

பாப்கார்ன்

மக்காச்சோளம் கொண்டு செய்யப்படுவது தான் பாப்கார்ன். உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் இதர நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்ன் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாவது பாதிக்கப்படாமல் இருக்கும்.

முழு தானிய பிரட்

முழு தானிய பிரட்

தற்போது கடைகளில் பல வெரைட்டியான பிரட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் அவைகளில் ஒன்றே ஒன்று மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது. அது தான், முழு தானிய பிரட்டி. சுத்திகரிக்கப்படாத முழு தானிய மாவைக் கொண்டு செய்யப்படுவதால், இது ஆரோக்கியமானது.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றில் நார்ச்சத்து மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலின் பல்வேறு பிரச்சனைக்கு நல்ல தீர்வையும் வழங்கும்.

முழு தானிய பாஸ்தா

முழு தானிய பாஸ்தா

உங்களுக்கு பாஸ்தா பிடிக்குமானால், முழு தானிய பாஸ்தாவை வாங்கி சுவையுங்கள். ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பாஸ்தாவை விட, முழு தானியங்களால் தயாரிக்கப்பட்ட முழு தானிய பாஸ்தா ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட.

பார்லி

பார்லி

பார்லியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் வளமையாக நிறைந்துள்ளது. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பார்லியை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இது கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

அனைவருக்குமே ஓட்ஸின் மகிமை பற்றி தெரியும். இத்தகைய ஓட்ஸை பழங்கள், பால் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை குறையும், கொலஸ்ட்ரால் குறையும், இதய நோய் வராமல் இருக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் கிடைக்கும்.

முழு தானிய சிப்ஸ்

முழு தானிய சிப்ஸ்

ஆம், முழு தானியங்களால் செய்யப்பட்ட சிப்ஸ் கூட கடைகளில் கிடைக்கிறது. இவை நன்கு மொறுமொறுப்புடன், சுவையாக இருக்கும். மேலும் இது உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு சிறந்த மாற்றாகவும் விளங்கும்.

முழு தானிய பிஸ்கட்

முழு தானிய பிஸ்கட்

பிஸ்கட் பிரியர்கள் அதிகம். அத்தகையவர்களுக்கு ஏற்றவாறு கடைகளில் முழு தானிய பிஸ்கட்கள் கிடைக்கின்றன. எனவே அவற்றை வேண்டுமானாலும் வாங்கி நொறுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways To Have Whole Grains

There are many health benefits for whole grains. Here is a list of whole grains that are rich in antioxidants, vitamins and aid in weight loss.
Desktop Bottom Promotion