தினமும் சாவாசனம் செய்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!

By:
Subscribe to Boldsky

யோகாசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு நிச்சயம் சாவாசனம் பற்றி தெரியும். ஆனால் சாவாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஆம், சாவாசனம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது சாவாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஆசனங்களிலேயே சாவாசனம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் பலருக்கும் மிகவும் பிடித்தமான ஆசனமாகவும் இருக்கும். ஏனெனில் இந்த ஆசனம் செய்வதற்கு உடலை வளைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு பிணம் போன்று படுத்திருந்தால் போதும். ஆனால் இந்த ஆசனம் செய்யும் போது, மனதால் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

என்ன தான் இந்த ஆசனம் மிகவும் ஈஸியாக இருந்தாலும், உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடலை ரிலாக்ஸ் செய்யும்

சாவாசனம் செய்யும் போது, படுத்துக் கொண்டு இருப்பதால், அவை உடல் முழுவதும் ரிலாக்ஸ் அமடையச் செய்யும். அப்படி கண்களை மூடிக் கொண்டு உடலை ரிலாக்ஸ் செய்யும் போது, உடலில் பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் தானாக ரிலாக்ஸ் ஆகும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்


சாவாசனம் செய்வதான் முலம், இரத்த அழுத்தத்தின் அளவு குறையும். மேலும் பதற்றத்தின் அளவும் குறையும். இப்படியே தினமும் சாவாசனம் செய்து வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை

ஆய்வு ஒன்றும், சாவாசனம் செய்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும் என்று சொல்கிறது. உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், இந்த யோகாசனம் செய்து வர, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

தளரச் செய்யும்

நல்ல கடுமையான உடற்பயிற்சிக்கு பின், இந்த சாவாசனத்தை செய்து வந்தால், உடல் தளர்ந்து குளிர்ச்சியடைந்து ரிலாக்ஸ் ஆகும்.

சாவாசனம் செய்யும் முறை

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர், பக்கவாட்டில் கைகளானது உடலோடு ஒட்டியோ அல்லது இடைவெளிவிட்டோ, ஆனால் உள்ளங்கைகள் மேலே பார்த்து இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் இந்த ஆசனத்தின் போது மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Benefits Of Savasana Pose

Those who are familiar with yoga, know about savasana. Another name for this pose is corpse pose. Now, have you heard of the benefits of savasana? Well, this posture is very beneficial in some ways. Let us discuss about the same in this article.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter