For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3டி பிரிண்டிங் மூலம் குழந்தையின் மண்டை ஓட்டை மாற்றிய மருத்துவர்கள் - அசத்தல்!!!

|

மருத்துவம் ஒவ்வொரு நாளும், மின்னல் வேகத்தில் மேலேறி சென்றுக்கொண்டே இருக்கிறது. இது உண்மையிலே நல்ல வளர்ச்சி தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் 3டி பிரிண்டிங் மூலம் வரும் பத்தாண்டுகளுக்குள் அமெரிக்கா தங்களது இராணுவ வீரர்களுக்கு உணவு உற்பத்தி செய்யப்போவதாக ஓர் தொழிநுட்ப மாநாட்டில் கூறியிருந்தது.

இனிமேல் 3டி-யில் பிரிண்ட் எடுத்து உணவை அப்படியே சாப்பிடலாம்!!!

3டி பிரிண்டர் பயன்படுத்தி ஓர் வாலிபர் தானே துப்பாக்கி பயன்படுத்தி துப்பாக்கி சூடு நிகழ்த்திய சம்பவமும் நிகழ்ந்ததால். இருவேருப்பட்ட கருத்துகள் உலாவி வந்தது. இப்போது, இதே 3டி பிரிண்டிங்கின் உதவியோடு, வாழ்வோடு போராடி வந்த சீனாவை சேர்ந்த 3 வயது குழந்தைக்கு மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இப்போது நலமுடன் வாழ்ந்து வருகிறார் ஹான் ஹான் எனும் குழந்தை....

எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் - பாடி பில்டர் கவலைக்கிடம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹான் ஹான் மூளையில் சுரப்பி பிரச்சனை

ஹான் ஹான் மூளையில் சுரப்பி பிரச்சனை

மூளையில் சுரக்கும் செரிபரமுள்ளிய திரவம் (cerebrospinal fluid) அதிகப்படியாக சுரந்ததால், ஹான் ஹானின் தலை பெரிதாக தொடங்கியது. சாதாரணமாக இருக்கும் அளவை விட நான்கு மடங்கு பெரியதாக ஹான் ஹானின் தலை வளர்ந்தது.

கண்பார்வை பறிபோகும் நிலை

கண்பார்வை பறிபோகும் நிலை

இந்த பிரச்சனையால் ஹான் ஹானுக்கு கண்பார்வை பறிபோகும் நிலை ஏற்படலாம் என்றும், மூளையில் புழுக்களின் தோற்று ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனால், மண்டை ஓடு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

எப்படி மண்டை ஓடை மாற்றுவது

எப்படி மண்டை ஓடை மாற்றுவது

3டி பிரிண்டிங் முறையில் மண்டை ஓடை மாற்றி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கான செலவு நான்கு முதல் ஐந்து லட்சம் சீன பணம் செலவாகும் என்று கூறினார்.

நன்கொடை தந்து உதவி

நன்கொடை தந்து உதவி

ஒரு லட்சம் சீன பணம் வரை நன்கொடையாக கிடைத்தது. இதை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

17 மணிநேர போராட்டம்

17 மணிநேர போராட்டம்

ஹான் ஹானுக்கு முழுதாக 3டி முறையில் மண்டை ஓட்டை மாற்றியமைத்து அறுவை சிகிச்சை செய்ய ஏறத்தாழ 17 மணி நேரம் ஆகியுள்ளது. கடைசியில் வெற்றிகரமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து முடித்தினர்.

அறுவை சிகிச்சையின் போது

அறுவை சிகிச்சையின் போது

அறுவை சிகிச்சி செய்யும் போது, ஹானின் மேல் மண்டை ஓடு முழுதாக அகற்றப்பட்டு, மூளையில் சுரந்த அதிகமான சுரப்பியை வற்ற செய்து, பிறகு புதியதாய் 3டி முறையில் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட மண்டை ஓட்டை அறுவை சிகிச்சை மூலம் இணைத்துள்ளனர்.

நலமுடன் இருக்கும் ஹான்

நலமுடன் இருக்கும் ஹான்

அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே கண்ணை திறந்தும், நன்கு சுவாசித்தும் காணப்பட்டார் ஹான். இவர் வளரும் போது, இவரது மண்டை ஓடுடன் சேர்ந்து புதியதாய் இணைக்கப்பட்ட மண்டை ஓடும் படர்ந்து வளரும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பல நாடுகளில் இந்த வினோத பிரச்னை இருக்கிறது

பல நாடுகளில் இந்த வினோத பிரச்னை இருக்கிறது

ஹான் ஹானுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை, பல நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இந்த அறுவை சிகிச்சை ஓர் நல்ல முன்னோடியாகவும், இந்த பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Baby becomes first person in the world to have 3D printed SKULL

A toddler in China has made medical history after becoming the first person in the world to have her entire skull reconstructed by 3D printers.
Desktop Bottom Promotion