For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!!

|

ஆங்கிலத்தில் ஓர் பழமொழி உண்டு, வலி இல்லாமல் எதையும் அடைய முடியாது என்று. அது போல தான் கசப்பான தருணங்கள் ஏற்படவில்லை என்றால் இன்பத்தை முழுமையாக உணர முடியாது. உணவிலும் அப்படிதான். வேப்பிலை கசப்பு தான், ஆயினும் அதைப் போன்று சிறந்த பயனளிக்கும் ஒரு கிருமி நாசினி வேறெதுவும் கிடையாது.

வல்லாரைக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

அந்த வகையில் உடலுக்கு பல அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு வகை தான் வெந்தயக் கீரை. இது கசப்பான ருசிக் கொண்டமையால் பெரும்பாலானோர் இதை சாப்பிட தவிர்ப்பார்கள். ஆனால், இதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை.

கசக்கும் வேப்பிலையின் இனிக்கும் நன்மைகள்!!!

உடலில் அடிக்கடி ஏற்படும் சிற்சில உபாதைகளையும், உடல்நலக் கோளாறுகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது வெந்தயக் கீரை. இனி அதன் அற்புத ஆரோக்கிய நன்மைகளை பற்றிப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் கோளாறுகள்

மாதவிடாய் கோளாறுகள்

வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள் குறையும்.

இடுப்பு வலு நீங்கும்

இடுப்பு வலு நீங்கும்

வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

கபம், சளி குணமாகும்

கபம், சளி குணமாகும்

கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.

சுறுசுறுப்பாக உதவும்

சுறுசுறுப்பாக உதவும்

மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.

கண்பார்வை

கண்பார்வை

வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.

வயிற்றுக் கோளாறுகள்

வயிற்றுக் கோளாறுகள்

வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவும்.

உடல் சூடு குறையும்

உடல் சூடு குறையும்

உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக உணர உதவும்.

மார்பு வலி

மார்பு வலி

மற்றும் வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வுக் காணலாம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Vendhaya Keerai

Do you know about the amazing health benefits of vendhaya keerai? read here.
Desktop Bottom Promotion