For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

By Maha
|

உடலில் நோய்கள் அடிக்கடி வருவதற்கு முக்கிய காரணம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இல்லாததே ஆகும். நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருந்தால், நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதற்கு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, கண்ட கண்ட மருந்து மாத்திரைகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமின்றி, ஒரு சில பானங்களும் உதவியாக இருக்கும். அந்த பானங்களில் உங்களால் முடிந்ததை அன்றாடம் குடித்து வந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரி, இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவும் பானங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும். மேலும் விலை குறைவில் கிடைக்கக்கூடியதும் கூட. எனவே உங்களுக்கு நோய்களின் தாக்குதல் இருக்கக்கூடாதெனில், அன்றாடம் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸை குடித்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் ஜூஸ் மூலம் தயாரிக்கப்படுவதாகும். எனவே இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், குளோரின், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஃப்ளோரின் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்துமே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். மேலும் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆசிட் இருப்பதால், இதுவும் உடலின் அமிலத்தன்மையை நிலைக்கச் செய்து, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

அன்றாடம் நீங்கள் க்ரீன் டீ குடிப்பவர்களா? அப்படியெனில் உங்களை நோய்க்கிருமிகள் அவ்வளவு எளிதில் தாக்க முடியாது. ஏனெனில் தினமும் க்ரீன் டீ குடித்து லந்தால், அதில் உள்ள பொருள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் க்ரீன் டீ குடித்து வந்தால், புற்றுநோய் வளர்ச்சி குறைக்கப்படுவதோடு, கட்டுப்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்ரான் பெர்ரி ஜூஸ்

க்ரான் பெர்ரி ஜூஸ்

க்ரான் பெர்ரி ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை இரண்டுமே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கக்கூடியவை. இந்த க்ரான் பெர்ரி ஜூஸ் சுவையுடன் இருப்பதோடு, இதய நோயையும் தடுக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும். மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

கிவி ஜூஸ்

கிவி ஜூஸ்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? கிவி பழத்தை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் செய்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு வேண்டிய வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி கிடைக்கும்-மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் பி1, கால்சியம், புரோட்டீன் மற்றும் சல்பர் போன்றவைகள் வளமையாக நிறைந்துள்ளன, எனவே முடிந்த அளவு கொஞ்சமாக பருகுங்கள். ப்ராக்கோலி ஜுஸ் சற்று கெட்டியாக இருப்பதால், இதனை மற்றொரு ஜூஸ் உடல் சேர்ததுப் பருகுங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Wonderful Immune Boosting Drinks

How to boost immunity? You can have these immune boosting drinks to boost your immune system.
Desktop Bottom Promotion