For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"இச்சு" கொடுத்தா "நச்"சுன்னு இருக்குமாம் ஆரோக்கியம்!

|

முத்தம் அன்பின் வெளிபாடு மட்டும் அல்ல, ஆரோக்கியத்தின் வெளிப்பாடும் கூட என்றால் நம்புவீர்களா நீங்கள்? ஆம்! நீங்கள் நூறுசதவீதம் இதை நம்பித்தான் ஆகவேண்டும். முத்தம் கொடுத்தால் உறவு நீடிக்கும் என நாம் அறிவோம், ஆரோக்கியமும் நீடிக்குமாம். தலைவலி, மன அழுத்தம், இரத்தக்கொதிப்பு என பல உடல் சார்ந்த கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது இந்த முத்த சிகிச்சை. ஆனால், ஒரு கண்டிஷன் இந்த முத்த சிகிச்சை தானமாக முன்வந்து, உணர்வுகளின் பிரதிபலிப்பாய் இருக்க வேண்டும். யாரையும் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக முத்தமிடுதல் தவறு. அதன் பின் போலீஸ் வந்து உங்களை லாடம் கட்டி அடிக்கும்.

எனவே, சீரான உடல்நலம் பெற, உடல்திறனை அதிகரிக்க, ஆரோக்கிய வலுவடைய... உங்கள் அன்புக்குரியவரிடம் பாசம் பாராட்டி முத்த பரிவர்த்தனைகளை செய்துக்கொள்ளலாம். இதற்கு மேலும் நேரத்தை வீணடிக்காமல், முத்த சிகச்சையின் மூலம் நீங்கள் அடையவிருக்கும் ஆரோக்கிய நலன்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு

நோய் எதிர்ப்பு

உங்களது அன்புக்குரியவருடன் நீங்கள் அதிக நேரம் முத்தம் பரிமாறிக்கொள்ளும் போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என அமெரிக்காவில் உள்ள பெண்கள் மருத்துவ பல்கலைகழத்தில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். "வெள்ளக்காரன் சொன்ன அது பொய்யா இருக்காதுப்பா..."

கலோரிகளை கரைக்க

கலோரிகளை கரைக்க

நமது உடலில் தேவையின்றி தேங்கும் கலரிகளினால் தான் கொழுப்பு அதிகரிக்கிறது, அதனால் தான் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதன் காரணமாய் தான் பல உடல் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படுகின்றன. முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை கரைக்க இயலுமாம்.

 தலைவலி

தலைவலி

ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த காலத்தில் இருபாலருக்கும் தலைவலி என்பது பெரும் வலியாக இருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர உங்களது காதல் துணையுடன் முத்தமிட்டும் கொள்வது சரியான தீர்வளிக்கும்.

இன்பம் பெருக உதவும்

இன்பம் பெருக உதவும்

முத்தமிட்டுகொள்வது, ஆண்களுக்கு உடலுறவுக்கொள்ளும் போது எளிதில் விறைப்படைய உதவுகிறதாம்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

உங்களது துணை துவண்டு போயிருந்தால், மனது வெம்பி போயிருந்தால்.. அவர்கள் புத்துணர்ச்சி அடைய, தன்னம்பிக்கை பெற நீங்கள் ஆசையாக முத்தமிடுவதே போதும் என்கின்றனர் நிபுணர்கள்.

முகத்தின் தசைகள் வலுவடைய

முகத்தின் தசைகள் வலுவடைய

முத்திமிட்டுக்கொள்வதன் மூலமாக முகத்தின் தசைகளை வலுவடைய செய்ய முடியும்.

ஓய்வு

ஓய்வு

முத்தமிட்டுக்கொள்வதனால் உடலும், மனமும், அழுத்தம் குறைந்து நல்ல நிலையடைய உதவுகிறது. எனவே, உடலோ அல்லது மனமோ கடினமாக இருந்தால் இதமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள்.

தசைப்பிடிப்புகள் சரியாகும்

தசைப்பிடிப்புகள் சரியாகும்

ஒருவேளை உங்களுக்கு எங்காவது உடலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் உங்களது துணையை முத்தமிட சொல்லுங்கள். முத்தமிடுவதன் மூலம், தசைகள் இலகுவாகி தளர்வடைந்து பிடிப்பு நீங்குகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Health Benefits Of Kisses

Do you know about the 8 health benefits of kisses, read here.
Story first published: Saturday, February 28, 2015, 18:23 [IST]
Desktop Bottom Promotion